[X] Close

ஒலிம்பிக்கில் வெற்றிபெற்றால் ஆயுள்முழுக்க இலவசமாக படம் பார்க்கும் வசதி - ஐநாக்ஸ் அறிவிப்பு

ஒலிம்பிக்

Lifelong-free-film-viewing-facility-for-Indian-Olympic-athletes-and-their-families-Inox-Leisure-Limited

ஒலிம்பிக்கில் வெற்றிபெறும் இந்திய வீரர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தினருக்கும் ஆயுள் முழுக்க இலவசமாக படம் பார்க்கும் வசதியை ஐநாக்ஸ் திரையரங்க நிர்வாகம் வழங்கியுள்ளது.


Advertisement

ஜப்பான் டோக்கியோ நகரில் ஒலிம்பிக் போட்டி தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கும்,  அவர்களுடைய குடும்பத்தினருக்கும்  ஆயுள் முழுக்க இலவசமாக ஐநாக்ஸ் திரையரங்குகளில் படம் பார்க்கும் வசதியை வழங்குவதாக அந்த நிர்வாகம் அறிவித்துள்ளது. அத்துடன் ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு உள்ள அனைத்து வீரர்களுக்கும்,  அவர்களுடைய குடும்பத்தினருக்கும் ஒரு வருடம் இலவசமாக படம் பார்க்க வசதியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளது. 

இந்தியா முழுக்க உள்ள எந்த ஐநாக்ஸ்  திரையரங்குகளிலும் அவர்கள் இலவசமாக படம் பார்த்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர். அதற்காக வீரர்களுக்கு பிரத்யேக அட்டை ஒன்று வழங்கப்படும் என்றும் அதை வைத்து அவர்களும் அவர்கள் குடும்பத்தினரும் இலவசமாக படம் பார்த்துக்கொள்ளலாம் என்று ஐநாக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close