[X] Close

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவளியுங்கள்: விராட் கோலி

ஒலிம்பிக்

Virat-Kohli-urges-people-to-support-Indian-athletes-at-Tokyo-Olympics

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் சார்பில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்குமாறு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி வீடியோ வெளியிட்டிருக்கிறார்.


Advertisement

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்களை ஊக்குவிக்குமாறு இந்திய கிரிக்கெட் அணியின் பிசிசிஐ ட்விட்டர் பக்கத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டி ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது.

"டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும்  நமது இந்திய விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கவேண்டும்" என்று விராட் கோலி கேட்டுக்கொண்டுள்ளார். 


Advertisement

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்காக 54 தடகள வீரர்கள் உட்பட 88 பேர் கொண்ட இந்திய வீரர்கள் குழு ஞாயிற்றுக்கிழமை டோக்கியோ வந்து சேர்ந்தது. இந்த ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன், வில்வித்தை, ஹாக்கி, ஜூடோ, நீச்சல், பளு தூக்குதல், ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட பிரிவுகளில் இந்தியாவை சேர்ந்த 127 விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்கின்றனர்.


Advertisement

Advertisement
[X] Close