[X] Close

டி20 கிரிக்கெட்: அதிகபட்ச ரன்களை பதிவு செய்தது பாகிஸ்தான் அணி

விளையாட்டு

Pakistan-Cricket-Team-Scored-its-highest-score-in-T20I-Cricket-and-this-came-against-England-Team

டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச ரன்களை பதிவு செய்தது பாகிஸ்தான் அணி


Advertisement

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது பாகிஸ்தான் அணி. இந்தத் தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் அணி டி20 வரலாற்றில் அந்த அணியின் அதிகபட்ச ரன்களை பதிவு செய்து அசத்தியது. 

20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்களை பதிவு செய்தது. இதுவே பாகிஸ்தான் அணி டி20 கிரிக்கெட்டில் பதிவு செய்துள்ள அதிகபட்ச ரன்களாகும். இதற்கு முன்னதாக 205 ரன்களை எடுத்ததே அந்த அணியின் அதிகபட்ச ரன்களாகும். மேலும் 8 முறை டி20 கிரிக்கெட்டில் 200-க்கும் கூடுதலாக ரன்களை பதிவு செய்துள்ளது அந்த அணி.


Advertisement

அந்த அணிக்காக தொடக்க வீரர்களாக களம் இறங்கிய முகமது ரிஸ்வான் மற்றும் கேப்டன் பாபர் அசாம் 150 ரன்களுக்கு முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். இருவரும் அரைசதம் கடந்திருந்தனர். அதன் பின்னர் வந்த பேட்ஸ்மேன்கள் அதிரடியாக பேட்டை விலாசா 232 ரன்களை எட்டியது அந்த அணி. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்தை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement
[X] Close