[X] Close

உ.பி Vs உத்தராகண்ட்... காவடி யாத்திரை அரசியலில் பாஜகவுக்குள் சலசலப்பும் பின்னணியும்

சிறப்புக் களம்

Uttar-pradesh-vs-Uttarakhand--The-hustle-and-bustle-within-the-BJP-in-the-Kavadi-pilgrimage-politics

ஒரே கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஆகியோர் 'காவடி யாத்திரை' குறித்து வெவ்வேறு கருத்துக்களை தெரிவித்து வருவது பாரதிய ஜனதா கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

கட்டுப்பாடுகளுடன் 'காவடி யாத்திரை' நடைபெற வேண்டும் என உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துவரும் நிலையில், காவடி யாத்திரைக்கு அனுமதி அளிக்க உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் மறுத்துள்ளார்.

Uttarakhand CM Tirath singh rawat spoke to UP CM Yogi Adityanath over phone  to start roadways buses - उत्तराखंड के सीएम तीरथ ने यूपी के सीएम योगी  आदित्यनाथ से फोन पर की


Advertisement

கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க காவடி யாத்திரை காரணம் ஆகிவிடுமோ என்கிற அச்சத்தின் காரணமாக, இந்த வருடாந்திர விழா குறித்து தற்போது வட இந்தியாவில் தொடர் சர்ச்சை ஏற்பட்டுவருகிறது.

‘அடுத்த வருடம் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு யோகி ஆதித்யநாத் காவடி யாத்திரைக்கு அனுமதி அளிக்கிறார்’ என்றும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றமும் கேள்விகளை எழுப்பியுள்ளது. அக்கேள்விகளுக்கு உத்தரப் பிரதேச அரசு பதில் அளிக்க வேண்டும் என்று சொல்லியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Electoral Compulsion? Yogi seeks to smooth ruffled feathers within party  ahead of UP polls | Deccan Herald


Advertisement

உத்தராகண்ட் மாநிலத்தை பொறுத்தவரை ஏற்கெனவே கும்பமேளாவில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றது கோவிட் தொற்று பரவல் அதிகரிக்க காரணமாக இருந்தது என்கிற குற்றச்சாட்டு அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்திலே உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள நைனிதால் உள்ளிட்ட சிலர் சுற்றுலாத் தலங்களில் கோவிட் விதிமுறைகள் மீறப்பட்டதும், அதனால் எழுந்த எதிர்ப்பும் அந்த மாநில அரசின் கவனத்தில் உள்ளது.

Haridwar Kumbh Mela 2021: Will Mela be Cut Short Due to Covid? Read What  Official Says

பொதுவாக பாரதிய ஜனதா கட்சியின் முதல்வர் முக்கிய விவகாரங்களில் ஒரே மாதிரியான நிலைப்பாடுகளை பின்பற்றுகிறார்கள். ஆனால், காவடி யாத்திரை இவ்விவகாரத்தில் இதற்கு மாறான சூழல் ஏற்பட்டுள்ளது அரசியல் வட்டாரங்களில் உற்று கவனிக்கப்படுகிறது. கோவிட் பரவலைத் தடுக்க இந்த வருடம் காவடி யாத்திரை நடத்த அனுமதி இல்லை என விரிவான ஆலோசனைக்கு பிறகு உத்தராகண்ட் அரசு முடிவு செய்துள்ளது.

காவடி யாத்திரையில் பங்கு பெறுவோர் உத்தராகண்ட் மாநிலத்தில் ஹரித்வார் நகரத்துக்குச் சென்று கங்கை நதியிலிருந்து நீரை எடுத்துச் சென்று தங்களுடைய கிராமங்களில் வழிபாடு நடத்துவது வழக்கம். லட்சக்கணக்கானோர் பல்வேறு மாநிலங்களிலிருந்து பயணம் செய்தால் கோவிட் அதிகம் பரவ வாய்ப்பு உள்ளது என்பதால் உத்தராகண்ட் அரசு காவடி யாத்திரை நடத்த வேண்டாம் என முடிவு செய்துள்ளது. மாநில முதல்வரே இந்த ஆலோசனைகளுக்கு தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Uttar Pradesh govt insists Kanwar yatra will go on | Latest News India -  Hindustan Times

ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட மூன்று கோடி நபர்கள் காவடி யாத்திரையில் பங்கேற்று கங்கை நதி நீரை பல்வேறு மாநிலங்களில் உள்ள தங்களுடைய கிராமங்களுக்கு எடுத்துச் செல்வது வழக்கம். மத்தியப் பிரதேசம், ஹரியானா, உத்திரப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து காவடி யாத்திரைக்கு லட்சக்கணக்கானோர் நடந்தே செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில்தான் பாரதிய ஜனதா கட்சி வட்டாரங்களில் இந்த வருட காவடி யாத்திரை புதிய அரசியல் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

- கணபதி சுப்பிரமணியம்


Advertisement

Advertisement
[X] Close