தற்போதைய குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரியின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி, புதிய குடியரசுத் துணைத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வாக்குப்பதிவு இன்று நடைபெறவுள்ளது.
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில், பாஜக கூட்டணிக் கட்சிகளின் சார்பில் வெங்கைய நாயுடுவும், காங்கிரஸ் கூட்டணி எதிர்க்கட்சிகளின் சார்பில், கோபாலகிருஷ்ண காந்தியும் வேட்பாளர்களாகக் களத்தில் உள்ளனர். நாடாளுமன்ற மாநிலங்களவையில் 58 எம்.பி-க்கள் பலத்துடன் காங்கிரஸ் கட்சி முதலிடத்திலும், பா.ஜ.க. 56 எம்.பி-க்களுடன் 2 வது இடத்திலும் உள்ளன. இருப்பினும் பாஜக வேட்பாளருக்கு, அதன் பல கூட்டணிக் கட்சிகளின் ஆதரவால் பலம் கூடும் என்பதால், அவருக்கே அதிக ஓட்டுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குடியரசுத் தலைவர் தேர்தலைப்போல, அதிக வாக்கு சதவிகிதத்துடன் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் வெற்றிபெறுவது கடினமானதாக இருக்கும் என்பதால், தங்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் எம்.பி-க்கள் அளிக்கும் வாக்குகள் செல்லாததாக இருந்துவிடக் கூடாது என பா.ஜ.க முடிவு செய்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, பாஜக கூட்டணி வேட்பாளரான வெங்கைய நாயுடுவுக்கு, மக்களவையில் 337 உறுப்பினர்கள் மற்றும் மாநிலங்களவையில் 80 உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது. இவர்கள் அனைவருக்கும், தங்கள் வேட்பாளர்கள் எப்படி வாக்களிக்க வேண்டும் என பா.ஜ.க மாதிரி வாக்குப்பதிவை நேற்று நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Loading More post
'அவர் காட்டுத்தனமாக பந்துகளை எறிவார்' - பாக். பவுலர் குறித்து சேவாக் பேச்சு! யார் அவர்?
விசா முறைகேடு விவகாரம் - கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரை டெல்லி அழைத்துச் செல்ல அனுமதி!
அஜித்தின் ‘ஆலுமா டோலுமா‘ பாடலுக்கு மெஹந்தி விழாவில் நடனமாடிய ஆதி, நிக்கி கல்ராணி
திருமணப் பரிசாக வந்த பொம்மை வெடித்து சிதறியதில் மணமகன் படுகாயம்! பழிவாங்கல் நடவடிக்கையா?
இந்தியாவில் வெளியானது விவோ எக்ஸ்80! சிறப்பம்சங்கள் என்னென்ன?
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்