Published : 04,Aug 2017 03:55 AM

உலகின் உயரமான துபாய் டார்ச் டவரில் திடீர் தீ

Fire-Breaks-Out-at-Dubai---s-Torch-Tower

துபாயில் உள்ள உலகின் மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒன்றான டார்ச் டவரில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

துபாயின் மேரினோ மாவட்டத்தில், சுமார் 1,105 அடி உயரம் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. உலகில் உயரமான கட்டிடங்களில் ஒன்றான இதில் 86 மாடிகள் உள்ளன. இதில் வணிக வளாகங்களும் இருக்கின்றன. டார்ச் டவர் என்ற இந்தக் கட்டிடத்தில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து உடனடியாக குடியிருப்பில் இருந்த அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். 

இந்த தீ விபத்தால் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் வரவில்லை. தீ தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக துபாய் அரசு தெரிவித்துள்ளது.  இதே கட்டிடத்தில் கடந்த 2015- ஆம் ஆண்டும் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்