Published : 22,Jun 2021 10:22 PM

தமிழ்நாட்டில் 7000-க்கு கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு - 194 பேர் உயிரிழப்பு

Continuous-declining-in-Tamil-Nadu-COVID19-Cases-and-6895-people-have-been-confirmed-for-infection-in-the-last-24-hour

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 6,895 பேர் புதிதாக கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 194 பேர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துள்ளனர். 13,156 பேர் தொற்றிலிருந்து குணம் அடைந்துள்ளனர். 56,886 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

பாதிக்கப்பட்ட 6,895 பேரில் இருவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். இதுவரை தமிழ்நாட்டில் மொத்தமாக 24,36,819 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தலைநகர் சென்னையில் 410 பேர் இன்று நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்திலேயே அதிகபட்சமாக கோவையில் 870 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவைக்கு அடுத்தபடியாக ஈரோட்டில் 741 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சேலம் (485), திருப்பூர் (434), தஞ்சாவூர் (372), செங்கல்பட்டு (286) மற்றும் நாமக்கல் (274) ஆகிய மாவட்டங்கள் மாநில அளவில் நோய் தொற்று பாதிப்பில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 

image

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்