Published : 18,Jun 2021 01:10 PM
திருப்பூர்: குழந்தை இறப்பில் சந்தேகம் - பெண் சிசுக்கொலையா என போலீசார் விசாரணை

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பச்சிளம் குழந்தை சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பல்லடத்தில் வசிக்கும் சண்முகம் - தனலட்சுமி தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ள நிலையில், 4-ஆவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை பையில் போட்டு அரசு மருத்துவமனை நிர்வாகத்துக்கு தெரிவிக்காமல் தனலட்சுமி வீடு திரும்பிய நிலையில், குழந்தை இறந்துவிட்டதாக கூறி அடக்கம் செய்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.