பெஃப்சி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் காலா, மெர்சல் உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட திரைப்படங்களின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பளப் பிரச்னை தொடர்பாக தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கும், பெஃப்சி தொழிலாளர் சங்கத்தினருக்கும் மோதல் வெடித்துள்ளது. இதனால் பெஃப்சி தொழிலாளர்கள் அல்லாதவர்களுடனும் படப்பிடிப்பு நடத்த தயாரிப்பாளர் சங்கத்தினர் அறிவித்திருந்தனர். இதையடுத்து இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் எனக்கூறி ஃபெப்சி தொழிலாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் ரஜினிகாந்தின் காலா, மெர்சல் உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட திரைப்படங்களின் படப்பிடிப்புகள் ரத்தாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மெர்சல் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பெஃப்சி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் படக்குழுவிற்கு பின்னடைவை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
பெஃப்சி தொழிலாளர்களுடன் மட்டுமே தயாரிப்பாளர்கள் பணியாற்ற வேண்டும். ஏற்கனவே இருந்த சம்பள முறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். தயாரிப்பாளர்கள், தொழிலாளர்களுக்கு இடையேயான பொதுவிதி புத்தகத்தை விரைவில் வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Loading More post
ராக்கெட்டுகளை ஏவுவதற்கு குலசேகரப்பட்டினத்தை தேர்வு செய்தது ஏன்?-இஸ்ரோ விஞ்ஞானி புதிய தகவல்
’குழந்தைகள் மார்க் விஷயத்தில் பெற்றோர்கள் இதை மட்டும் செய்யாதீங்க’- அமைச்சர் அன்பில் மகேஷ்
காலிப் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை! - நீதிமன்றம்
தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த காவல் அதிகாரி ராஜன் நியமனம்!
கணவர் மரணம் குறித்து தவறான தகவலை பரப்பாதீங்க! - நடிகை மீனா வேண்டுகோள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்