[X] Close

ஐதராபாத்தில் நடைபெற்ற விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா திருமணம் - புகைப்பட ஆல்பம்!

சினிமா

actor-Vishnu-Vishal---Badminton-player-Jwala-Gutta-Wedding-Photos

நடிகர் விஷ்ணு விஷால் - ஜூவாலா கட்டா திருமணம் ஐதராபாத்தில் இன்று நடைபெற்றது.

நடிகர் விஷ்ணு விஷால் 4 வருடங்களாக காதலித்து வந்த தனது கல்லூரி ஜூனியரான ரஜினி நட்ராஜ் என்ற பெண்ணை கடந்த 2011-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ரஜினியின் அப்பா நட்ராஜ் பிரபல வில்லன் நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தம்பதிகளுக்கு ஆர்யன் என்ற ஆண் குழந்தையும் உள்ளது.

இதனிடையே இருவருக்கும் மனவருத்தம் ஏற்பட்டு சட்டப்படி விவாகரத்து பெற்றனர். இதன்பின், பேட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா உடன் இணைந்து பேசப்பட்டு வந்த விஷ்ணு விஷால், ஜுவாலாவுடன் நெருக்கமாக இருக்கும் படங்களை இருவருமே சமூக ஊடக பக்கங்களில் பதிவேற்றி வந்தனர்.


Advertisement

image

சமீபத்தில் தனது பிறந்தநாள் அன்று ஜுவாலாவுடனான காதலை உறுதி செய்த விஷ்ணு விஷால் 'காடன்' படத்தின் தெலுங்கு விழாவில் கலந்துகொண்டபோது ”நாங்கள் இருவரும் விரைவில் இணைய இருக்கிறோம். ஆம், நான் தெலுங்கு தேச அல்லுடு (தெலுங்கு தேசத்தின் மருமகன்) ஆகப் போகிறேன். இதை நினைத்து பார்க்கையில் சந்தோஷமாக இருக்கிறது. நான் விரைவில் திருமண தேதி அறிவிக்கிறேன்" என்று பேசியிருந்தார்.

image


Advertisement

அதன்படி, ஏப்ரல் 22 ஆம் தேதி ஜுவலா கட்டாவுடன் திருமணம் என்று ஒரு வாரத்திற்கு முன்பு அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

image

அதன்படி இன்று ஐதராபாத்தில் விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா திருமணம் நடைபெற்றத்து.

image

திருமணத்திற்கு முந்தைய மெஹந்தி ஃபங்கஷன் புகைப்படங்களையும் விஷ்ணு விஷால் அணிவித்த வைர மோதிரத்தையும் ஜூவாலா கட்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

image

இந்நிலையில், இன்று நடந்துள்ள திருமணப் புகைப்ப்டங்களில் வேஷ்டி சட்டை - புடவையில் விஷ்ணு விஷால் ஜுவாலா ஜோடியின் ஈர்க்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் லைக்ஸ்களை குவித்து வருகின்றன.

image


Advertisement

Advertisement
[X] Close