இளையோர் மொழிக்களம் 30 | மொழி வாழ்வது நம் நாக்கில்தான்..!

பள்ளியில் சேர்ந்ததும் நாம் கையைக் குவித்து வாழ்த்திப் பாடியது மொழி வாழ்த்துத்தான். தமிழ்த்தாய் வாழ்த்து ! ‘உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே’ என்று நெஞ்சுருகிப் பாடுகிறோம்.
இளையோர் மொழிக்களம்
இளையோர் மொழிக்களம்Image by Kristin Baldeschwiler from Pixabay

தமிழ்ச் சொற்களை ஆள்வதைத் தடுப்பது நம்மவர்கட்கு உள்ள தாழ்வு மனப்பான்மை. ஆங்கிலத்திலோ பிறமொழியிலோ உள்ளவை மட்டுமே சொற்கள். தமிழில் இருப்பின் அவற்றைச் சொற்களென்று கருதுவதில் மனத்தடையும் உண்டு. அதுபோல் வருமா, அதுவாகவே இருக்கட்டுமே, ஏன் அதற்கெல்லாம் தமிழ் ? - இக்கேள்விகள் முந்தி வரும். தமிழில் எழுதவும் பேசவும் பயன்படுத்தப்படும் சொற்கள் தமிழிலேயேதான் இருக்கவேண்டும் என்பதில் நம்மிடம் எவ்வுறுதியும் இல்லை. எல்லாம் விட்டுக்கொடுக்கப்பட்டு எஞ்சியுள்ள சொற்களைக்கொண்டு வாழ்கிறோம். பிறமொழிச்சொற்கள் எவ்வாறு உள்நுழைந்திருப்பினும் அவற்றையே பற்றிக்கொண்டு தொடர்வதற்குத் தயக்கமோ வெட்கமோ நமக்கில்லை.

பள்ளிக் கல்வியின் அடிப்படையே மொழிக்கல்விதான். மொழியைக் கற்றுக்கொடுத்த பிறகுதான் அம்மொழியின் வழியே பிற இயல்களைக் கற்றுக்கொடுக்கிறார்கள். கற்றுக்கொண்ட மொழி பிற்கால வாழ்க்கையில் சிறிது சிறிதாக மறக்கத் தொடங்குகிறது. ஏனென்றால் அன்றாடப் பயன்பாட்டில் இன்னொரு மொழி தோளுரசி நிற்கிறது. தமிழில் தங்கு தடையின்றிப் பேச முடியாதவர்கள் ஆங்கிலச் சொற்றொடர்களை அஞ்சாமல் ஆள்கின்றனர். இது நமது மொழி, இது நமது மண், இது நமது பண்பாடு, இது நமது நீர்நிலை, இது நமது அக்கம்பக்கம், இவை நம்மைச் சுற்றி வாழும் காக்கை குருவிகள், இவை நம்மை அண்டிப்பிழைக்கும் அஃறிணைகள் – என எவற்றையுமே நாம் காத்துப் புரக்கும் மனநிலையோடு பார்ப்பதில்லை. அவற்றினை அழிவுக்கு ஒப்புக்கொடுக்கின்ற அளவுக்குக் கொடுமனத்தினர் ஆகியிருக்கிறோம்.

இன்றைய கட்டாய ஊடகமான இணையத்தில் இன்னொரு போக்கு தலைவிரித்தாடுகிறது. எல்லாவற்றையுமே நகைச்சுவைப்படுத்துவது. சிறுபொருள் நோக்கில் அணுகுவது. கிண்டற்பொருளாக்கிப் பார்ப்பது. இந்த நகைச்சுவைப் போக்கு எவ்வொன்றின் அருமையையும் தாழ்த்திப் பேசுகிறது. செய்தித்தொடர்கள்கூட ஏளனமாக எழுதப்படுகின்றன. காணொளித் தலைப்புகளில் கொடுங்கோன்மைக்கு அளவில்லை. வளர்ந்தவர்கள் இளையவர்கள் அனைவர்க்குமே இங்கே முதிரா மனப்பாங்கு. முதலில் இந்தக் கிண்டலாக்கம் அரசியல் தலைவர்கள் தொடங்கி ஒவ்வொன்றாகத் தொற்றுகிறது. பிறகு வானிற்குக் கீழுள்ள அனைத்துமே கிண்டல்தான். ஆற்றைச் சாக்கடை ஆக்கும்போதே, கடலோடு கழிவுகலக்கிக் காணும்போதே, ஏரியை மூடி நிரப்பும்போதே, மலைகளைப் பெயர்க்கும்போதே - எல்லாம் தொடங்கிவிடுகின்றனவே. இங்கே எது ஒன்றுக்கொன்று தொடர்பற்றது ?

பள்ளியில் சேர்ந்ததும் நாம் கையைக் குவித்து வாழ்த்திப் பாடியது மொழி வாழ்த்துத்தான். தமிழ்த்தாய் வாழ்த்து ! ‘உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே’ என்று நெஞ்சுருகிப் பாடுகிறோம். தமிழ்த்தாய் வாழ்த்தினைப் பாடும் குரல்களின் கூட்டொலியில் ஒரு நொடியேனும் மெய் சிலிர்த்து நிற்கிறோம். தமிழைத் தெய்வமாய் வணங்குகிறோம். அதனால்தான் தமிழ் மரபுச் செய்யுள்களை எவரும் தாழ்த்திப் பேசமாட்டார்கள். கவிதைக்குறையோடு விளங்கினாலும் சுவைமட்டில் இருந்தாலும் செய்யுள் செய்யுளே. இன்று எழுதப்படும் புதுக்கவிதைகளை முன்பின்னாக ஏற்றியிறக்கிக் கூறலாம். யாப்பில் எழுதப்பட்ட செய்யுள்களை அவ்வாறு கூறத் துணியார். கம்பரும் பாவலரே. உள்ளூரில் மரபியற்றும் கந்தசாமியும் பாவலரே. ஏனென்றால் மொழியன்னை அங்கே இருவர் யாப்பிலும் உயிர்த்திருக்கிறாள். ஒவ்வொரு சீரிலும் சீர்பெற்றிருக்கிறாள். இக்காரணம் பற்றியே தமிழறிஞர்களையும் மதிப்போடு பார்ப்பார்கள். அந்த மதிப்பே தமிழாசிரியர்களுக்கும் உடையது. தமிழறிஞர்களையும் தமிழாசிரியர்களையும் அரசு முதற்கொண்டு போற்றுவதும் இங்ஙனமே. இவ்வாறு மொழிபற்றிக் கொள்ளவேண்டிய மதிப்புணர்ச்சி வழிவழியாக நாமடைந்த பண்பாடு. ஏழைப் புலவர்க்கும் யானை கொடுக்கப்பட்டது.

இளையோர்கட்கு வழிகாட்ட வேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள் மூத்தோர்கள். அவர்கட்கு அரிது பெரிதினை மறைமுகமாகவோ நேரடியாகவோ உணர்த்துபவை வளர்ந்தவர்களின் செயல்பாடுகள். தாய் தந்தையை ஏளனப்பொருளாக்கிப் பேசுவது போன்ற திரைக்காட்சிகளின் நீட்சியாக இங்கே இணையச் செயல்பாடுகள் உள்ளன. அவற்றில் தமிழ்சார்ந்த செயல்பாடுகளும் ஏளனப்படுத்தப்படுகின்றன. இத்தகைய போக்குகளிடமிருந்து இளைய தலைமுறையினர் விலகி இருக்கவேண்டும். கேளிக்கைக்குரியவை வேறு பொருள்கள்.

எல்லா மறுமலர்ச்சிகளும் இளையவர்களின் பங்கேற்பினால்தான் நடந்தேறின. காலத்தைப் புரட்டிப் போட்டன. மொழியுலகமும் அத்தகைய பங்கேற்பினை இளையவர்களிடம் கோருகிறது. வழமையான இணைய மொக்கைப் போக்குகளிடமிருந்து மாண்புமிக்க பொருள்களில் தள்ளியிருங்கள். இணைய எள்ளற்போக்கு போதைப்பொருள் பழக்கத்திற்கு நிகரானது. அது நம்மையே அழித்துக்கொள்வதை உணர்த்தாமல் உடனடி இன்பத்தில் திளைக்கவைப்பது. பேரறிவாளிகளைக்கூட இணைய எள்ளற்போக்கு கண்ணடித்து அழைக்கும். சிறிதேனும் விழிப்புணர்வோடு இல்லையெனில் உடனே உடன்பட்டுவிடுவோம். இணைய எள்ளற்கு அன்றைய நாளைத் தவிர்த்து மறுநாள் வாழ்வில்லை. புற்றீசலாய் அந்தப்போக்கில் இணைந்து ஒரு சுற்று சுற்றி வீழ்ந்துவிடவேண்டா.

மொழியானது இனிமேல் நாம் பயன்படுத்தும் சொற்களால்தான் வாழப்போகிறது. மொழியின் வாழிடம் நம் நாக்கு. இரண்டாமிடத்தை எழுதுகோலுக்குத் தரலாம். நாவினைச் சுழற்றும்வரை மொழிச்சொற்கள் காற்றில் பூந்துகளாய் வாழும். நாவிலிருந்து வெளியேறிவிட்டால் அதன் பொற்காலம் முடிவடைகிறது. பேச்சு மொழியாயும் எழுத்து மொழியாயும் காப்பிய மொழியாயும் கலை அறிவியல் மொழியாயும் செம்மொழியாயும் காலத்தோடு தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் தகைமையுடையதாயும் விளங்கும் தமிழைக் காக்கும் பொறுப்பு நம் அனைவர்க்குமானது.

முந்தைய பகுதிகள்

இளையோர் மொழிக்களம்
மொழி மட்டும் தப்பித்துவிடுமா ?
இளையோர் மொழிக்களம்
தமிழுக்குத் தலைப்பில்கூட இடமில்லையா?
இளையோர் மொழிக்களம்
பூமர் என்பவர் யார் ?
இளையோர் மொழிக்களம்
தாய்மொழிக் கல்விக்கு முன்னரே பிறமொழி கற்பது வன்முறை
இளையோர் மொழிக்களம்
இளையோர் மொழிக்களம் | புரோ எப்போது வழக்கொழியும் ?
இளையோர் மொழிக்களம்
நம்புங்கள், குழந்தையாய் இருக்கும்போதே சொற்களை உருவாக்கினீர்கள் !
இளையோர் மொழிக்களம்
ஒவ்வொரு சொல்லாய்ப் பழகி அறியும் குழந்தை !
இளையோர் மொழிக்களம்
கோழியை ஒன்றும் செய்ய முடியாது !
இளையோர் மொழிக்களம்
எடுத்த எடுப்பில் ஏபிசிடியைக் கற்றுக்கொடுக்கலாமா ?
இளையோர் மொழிக்களம்
வீட்டில் பந்தாக இருந்தது, பள்ளியில் பால் ஆகிறது !
இளையோர் மொழிக்களம்
இளையோர் மொழிக்களம்
இளையோர் மொழிக்களம்
குழந்தையின் தாய்மொழி மனம் சுக்குநூறாக உடையும் இடம்
இளையோர் மொழிக்களம்
ஒரு மொழியிலேனும் புலமையும் ஆற்றலும் வேண்டும் ! அது எந்த மொழியாக இருக்கவேண்டும் ?
இளையோர் மொழிக்களம்
இளையோர் மொழிக்களம் | ‘How I wonder what you are' என்ற தொடர் குழந்தை கற்க வேண்டிய தொடரா?
இளையோர் மொழிக்களம்
இளையோர் மொழிக்களம் | தமிழிலும் தள்ளாட்டம் ஆங்கிலத்திலும் அரைகுறை!
இளையோர் மொழிக்களம்
ஆங்கில ஆசிரியர்கள் நூல்களை எழுதுகிறார்களா ?
இளையோர் மொழிக்களம்
இளையோர் மொழிக்களம் | விளையாட்டில் வளர்ந்த மொழி
இளையோர் மொழிக்களம்
இளையோர் மொழிக்களம் | நிலக்கரிக்கு ஆங்கிலச் சொல் தெரியுமா?
இளையோர் மொழிக்களம்
இளையோர் மொழிக்களம் |மொழியின் மடியில் விளைந்த சொற்கள் - 18
இளையோர் மொழிக்களம்
இளையோர் மொழிக்களம் பகுதி 19 - செம்மி ஜிம்மி ஆனது எப்படி?
இளையோர் மொழிக்களம்
இளையோர் மொழிக்களம் | உறவுப் பெயர்களின் விளி வடிவம் உண்மைப் பெயர்களாயின ! - 20
இளையோர் மொழிக்களம்
இளையோர் மொழிக்களம் | பேசத் தெரிந்தவரே எல்லாராலும் விரும்பப்படுகிறார் -21..!
இளையோர் மொழிக்களம்
இளையோர் மொழிக்களம் | மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டுமா ? இளையராஜா பாடல்களைக் கேளுங்கள் - 22 !
இளையோர் மொழிக்களம்
இளையோர் மொழிக்களம் 23 | 'செவன் அண்ட் ஆப் சனி’ என்று ஏன் சொல்வதில்லை ?
இளையோர் மொழிக்களம்
இளையோர் மொழிக்களம் | தங்கமணிக்கு என்ன பொருள் - 24 ?
இளையோர் மொழிக்களம்
இளையோர் மொழிக்களம் | வடிவேல் என்றால் நகைச்சுவை மட்டுந்தானா ?
இளையோர் மொழிக்களம்
இளையோர் மொழிக்களம் | சேர சோழ பாண்டியர்களைத் தெரியும், அப்பெயர்களின் பொருள் தெரியுமா ?
இளையோர் மொழிக்களம்
இளையோர் மொழிக்களம் 27 | ஊர்ப்பெயர்களைத் தொடர்ந்து பயன்படுத்துங்கள்!
இளையோர் மொழிக்களம்
இளையோர் மொழிக்களம் 28 | திருவண்ணாமலை என்ற பெயர் எப்படி வந்தது?
இளையோர் மொழிக்களம்
இளையோர் மொழிக்களம் 29 | அன்றாடப் பயன்பாட்டுச் சொற்கள் அனைத்திலும் தமிழ்செய்க !

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com