[X] Close >

ஐபிஎல் : ஆர்சிபி அணிக்கான பயிற்சியில் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடி பட்டையை கிளப்பிய மேக்ஸ்வெல்

Glenn-Maxwell-Continuously-played-Reverse-Sweep-shots-in-the-First-Practice-Session-for-His-new-IPL-Franchise-Team-RCB

ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டரான மேக்ஸ்வெல் நடப்பு ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக முதல்முறையாக விளையாட உள்ளார். அவரை சுமார் 14.25 கோடி ரூபாய்க்கு அந்த அணி ஏலத்தில் எடுத்துள்ளது. கிரிக்கெட் உலகின் ‘பிக் ஷோ’ என ரசிகர்கள் அவரை செல்லமாக அழைப்பது உண்டு. இந்நிலையில் ஆர்சிபி அணிக்கான தனது முதல் பயிற்சியில் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடி பட்டையை கிளப்பியுள்ளார் அவர். 


Advertisement

அந்த அணியின் பந்து வீச்சாளர்கள் மற்றும் நெட் பவுலர்கள் வீசிய பந்துகளை மாஸாக ஷாட் ஆடி அசத்தியுள்ளார். மாடர்ன் டே கிரிக்கெட்டில் பேட்டிங் ஸ்டேன்ஸ் எதுவுமே பின்பற்றாமல் பவுலர்களை இம்சிக்கும் சர்வதேச பேட்ஸ்மேன்களில் மேக்ஸ்வெல்லும் ஒருவர். 

கடந்த 2020 சீசனில் பஞ்சாப் அணிக்காக அவர் விளையாடி அவர் 13 போட்டிகளில் வெறும் 108 ரன்களை தான் குவித்திருந்தார். ஆஸ்திரேலிய அணிக்காக அவர் கடைசியாக விளையாடிய இரண்டு ஒருநாள் போட்டிகளில் அடுத்தடுத்து அரை சதம் பதிவு செய்திருந்தார். அண்மையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் அவர் 31 பந்துகளில் 70 ரன்களை விளாசி இருந்தார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close