கடந்த மார்ச் மாதத்தில்தான் இதுவரை இல்லாத அளவுக்கு வீட்டுக் கடனுக்கான வட்டி மிகவும் குறைவாக இருந்தது. அப்போது, 6.70 சதவீத அளவுக்கு வட்டி நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. தற்போது வீட்டுக் கடன்களுக்கு 0.25 சதவீதம் அளவுக்கு வட்டி உயர்த்தப்பட்டு, 6.95 சதவீதமாக வட்டி நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
நாட்டின் முக்கியமான வங்கியான எஸ்பிஐ உயர்த்தி இருப்பதால், மற்ற வங்கிகளும் வீட்டுக் கடன் வட்டியை உயர்த்தும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. பிப்ரவரி மாதத்தில் வீட்டுக் கடன் வட்டி 6.80 சதவீதமாக இருந்தது. இதனை 0.10 சதவீதம் குறைத்து மார்ச் மாதத்துக்கு மட்டும் 6.70 சதவீதமாக வீட்டுக் கடன் வட்டியை நிர்ணயம் செய்திருந்தது எஸ்பிஐ. அதேபோல மார்ச் மாதம் பரிசீலனை கட்டணத்தையும் எஸ்பிஐ நீக்கி இருந்தது.
தற்போது பரிசீலனை கட்டணம் வசூலிக்கப்பட இருக்கிறது. குறைந்தபட்சம் ரூ.10,000 முதல் அதிகபட்சம் ரூ.30,000 வரை இந்த (+ ஜிஎஸ்டி) இந்தக் கட்டணம் இருக்கக் கூடும். வீட்டுக் கடனுக்கான வட்டி உயர்த்தப்பட்டாலும் 7 சதவீதத்துக்குள் இருப்பதால் இதுபோன்ற சிறிய ஏற்றம், வீடு வாங்குபவர்களை பாதிக்காது என்றே நிதி ஆலோசகர்கள் தெரிவிக்கிறார்கள். வங்கித் துறையில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் பல மாற்றங்கள் நடந்து வருகின்றன. இதில் வீட்டுக் கடன் வட்டியும் ஒன்று.
Loading More post
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி - தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் 12000ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு - 59 பேர் உயிரிழப்பு
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ