[X] Close >

அனைத்து நாட்களிலும் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு

government-has-written-to-all-state-governments-asking-them-to-be-vaccinated-against-corona-every-day

ஏப்ரல் மாதத்தில் அனைத்து நாட்களிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. 


Advertisement

கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. இந்நிலையில் ஏப்ரல் மாதத்தில் அனைத்து நாட்களிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.  அரசு விடுமுறை தினமாக இருந்தாலும் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட வேண்டுமெனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜூலை மாதத்துக்குள் 30 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 30.31 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close