பெண் வேட்பாளருக்கு வாட்ஸ் அப்பில் ஆபாச படம் அனுப்பிய நபர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் கி.வீரலட்சுமி. தமிழர் முன்னேற்றப்படை என்ற அமைப்பின் நிறுவனரான இவர், சென்னை பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில் ‘மை இந்தியா பார்ட்டி’ சார்பில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், வீரலட்சுமி பம்மலில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது தெரியாத ஒரு எண்ணில் இருந்து ஆபாச வீடியோக்கள் வந்ததாக தெரிகிறது. இதையடுத்து அவர் இதுகுறித்து சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே “ஆபாச வீடியோ அனுப்பிய நபரை மூன்று நாட்களில் போலீசார் கைது செய்ய வேண்டும் . இல்லையெனில் நானே அந்த நபரை கண்டு பிடித்து, தூக்கிட்டு வந்து நிர்வாணமாக பல்லாவரம் சந்தையில் கட்டி வைத்து பிறப்புறுப்பை அறுத்து சமூக வலைதலைத்தில் வெளியிடுவேன்” என வீடியோ பதிவு ஒன்றையும் வீரலட்சுமி ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
Loading More post
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி!
தமிழகத்தில் ஒரேநாளில் 10,941 பேருக்கு கொரோனா பாதிப்பு - 44 பேர் உயிரிழப்பு
வேலூர்: அரசு மருத்துவமனையில் 5 நோயாளிகள் உயிரிழப்பு- ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் என புகார்