[X] Close >

சென்னை சென்ட்ரலில் ஆவணம் இல்லாததால் பயணியிடம் ரூ18 லட்சம், 5.5 கிலோ வெள்ளி பறிமுதல்

18-lakh-cash-and-5-5-kg-silver-seized-without-documents

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 18 லட்ச ரூபாய் பணம் மற்றும் 5.5 கிலோ வெள்ளி பறிமுதல் செய்தனர் ரயில்வே பாதுகாப்பு படையினர்.


Advertisement

சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் பணப்பட்டுவாடாவை தடுப்பதற்காக உரிய ஆவணமில்லாமல் ரயில் மூலம் கொண்டு வரப்படும் நகை, பணத்தை ரயில்வே பாதுகாப்பு பறக்கும் படையினர் பறிமுதல் செய்து அதை துறைமுகம் தேர்தல் பறக்கும் படையினரிடம் ஒப்படைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் அதே போல் இன்று மதியம் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து வந்த இரண்டு பேர் கையில் பையுடன் சந்தேகத்திற்கிடமாக வந்ததால் ரயில்வே பாதுகாப்பு பறக்கும் படை அதிகாரிகள் பைகளை சோதனை செய்துள்ளனர். அதில் 18 லட்சம் பணம் மற்றும் 5.5 கிலோ எடையுள்ள வெள்ளி கொலுசுகள் மற்றும் 1 தங்க வளையல்கள் இருந்தது.


Advertisement

image

நகைக்கு உண்டான தகுந்த ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படையினர் நகை, பணத்தை பறிமுதல் செய்து இருவரிடமும் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் ஆந்திரா மாநிலம் சித்தூரை சேர்ந்த கோபால் சிங் மற்றும் சையது அன்சாரி பாஷா ஆகியோர் என்பது தெரியவந்தது. இருவரும் திருப்பதியில் வெள்ளி வியாபாரம் செய்து வருவதாகவும், சென்னை சவுகார்பேட்டையில் வெள்ளி கட்டி வாங்குவதற்காக திருப்பதியில் இருந்து சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்ததாக தெரிவித்தனர்.

இதனையடுத்து 18லட்ச பணம் மற்றும் 5.5 கிலோ வெள்ளி, 1 தங்க வளையல் ஆகியவற்றை துறைமுகம் தேர்தல் பறக்கும் படையினரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாகவும், வருமான வரிதுறையினருக்கு தகவல் அளிக்க முடிவு செய்துள்ளதாகவும் ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close