பாஜக மக்களவை உறுப்பினரான கௌசால் கிஷோரின் மகனை பைக்கில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடினர்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்திலுள்ள மோகன்லால்கஞ்ச் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் கௌசால் கிஷோர். இவரது மனைவி ஜெயா தேவி, பாஜக சார்பில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார்.
இந்த தம்பதியரின் மூத்த மகன் 30 வயதான ஆயுஷ் கிஷோர், இன்று (புதன்கிழமை) அதிகாலை வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, லக்னோ நகரின் மாண்டியான் என்ற பகுதியில் பைக்கில் வந்த மர்ம நபர்கள் ஆயுஷின் கையிலும் மார்பிலும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியுள்ளனர். ஆயுஷ் கிஷோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆயுஷ் கிஷோர் இரண்டாவது முறையாக தாக்கப்பட்டுள்ளதால் இது முன்விரோதத்தின் காரணமாக நடந்ததாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. கண்காணிப்பு காமிரா பதிவுகளைக் கொண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பாக கௌசால் கிஷோரின் நெருங்கிய உறவினர் ஒருவர் சந்தேகத்தின்பேரில் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கௌசால் கிஷோரின் இளைய மகன் ஆகாஷ் கிஷோர், ஏற்கெனவே சிறுநீரக செயலிழப்பால் இறந்துவிட்டார்.
Loading More post
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக் கடைகள், தியேட்டர்கள் இயங்கத் தடை
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!
“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” - தமிழக அரசு
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
3-வது கொரோனா அலைக்கு மகாராஷ்டிரா தயாராகிறது: அமைச்சர் ஆதித்யா தாக்கரே
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி