குஜராத் மாநிலத்தின் தாத்ரா நகர் ஹவேலி தொகுதியின் சுயேட்சை எம்பி ஆன மோகன் தெல்கர், திங்கட்கிழமை மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் சீலிங் ஃபேனில் தூக்கில் தொங்கியவாறு கண்டறியப்பட்டார்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ‘’தெற்கு மும்பை மெரைன் டிரைவ் பகுதியிலுள்ள ஒரு ஹோட்டலில் தூக்கில் தொங்கிய நிலையில் தெல்கரின் உடல் கண்டறியப்பட்டது. அவர் பக்கத்தில் குஜராத்தி மொழியில் எழுதப்பட்டிருந்த பல பக்கங்கள் அடங்கிய தற்கொலை கடிதம் ஒன்று இருந்தது. உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. முதல்கட்டமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்துவருகிறது’’ என்று கூறினர்.
தெல்கரின் தற்கொலை கடிதம் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படாததால் மரணத்தில் மர்மம் நீடிக்கிறது.
1989 மற்றும் 2009க்கு இடைப்பட்ட காலத்தில் 6 முறை யூனியன் பிரதேச மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தெல்கர். இதில் 1989,1991 மற்றும் 1996 ஆகிய ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட இவர், 1998ஆம் ஆண்டு மட்டும் பாஜக சார்பாக போட்டியிட்டார். பிறகு 1999 மற்றும் 2004ஆம் ஆண்டு சுயேட்சையாக நின்று வெற்றிபெற்றார். 2009ஆம் ஆண்டு மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த அவர் 2009 மற்றும் 2014ஆம் ஆண்டு தேர்தல்களில் தோல்வியை தழுவினார். இதனால் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய அவர், 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!