தங்கள் தளங்களில் பகிரப்படும் செய்திகளுக்கு ஃபேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் கட்டணம் செலுத்த கோரும் சட்டத்தில் எவ்வித திருத்தம் செய்ய வாய்பில்லை என்று ஆஸ்திரேலிய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
உலகின் ஏழு கண்டங்களில் மிகவும் சிறியது ஆஸ்திரேலிய கண்டம். ஆனால் கடந்த சில நாட்களாக ஆஸ்திரேலிய அரசுக்கும், டெக் உலகின் சாம்ராட்ளான பேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனத்துக்கும் இடையிலான மோதல் உலகம் முழுவதும் பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. அதிலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பேஸ்புக் நிறுவனம் ஆஸ்திரேலிய அரசின் சில அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கங்கள் மற்றும் ஆஸ்திரேலிய ஊடக நிறுவனங்களின் பேஸ்புக் பக்கத்தையும் முடக்கியது பேஸ்புக். அது அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
ஆஸ்திரேலிய அரசு அமலுக்கு கொண்டு வரவுள்ள News Media and Digital Platforms Mandatory Bargaining Code என்ற சட்டம் தான் பேஸ்புக் இதை செய்ய காரணம் என சொல்லப்படுகிறது. அதாவது பேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு ஆஸ்திரேலிய ஊடகங்கள் கொடுக்கின்ற கண்டென்ட்டுகளுக்கு ராயல்டி உரிமை கோருகிறது அந்த சட்டம்.
இன்றைய டிஜிட்டல் உலகில் கூகுள் தேடல் மற்றும் பேஸ்புக் நியூஸ் ஃபீட் மூலமாக தான் பலரும் செய்திகளை வாசிக்கிறார்கள். அப்படி இருக்கின்ற சூழலில் அந்த டிஜிட்டல் தளங்களுக்கு கண்டென்ட்டுகளை ஜெனெரேட் செய்யும் தங்கள் நாட்டின் ஊடக நிறுவனங்களுக்கு ஒரு பங்கு வேண்டுமென்பது தான் ஆஸ்திரேலியாவின் வாதம்.
இது தொடர்பாக ஆஸ்திரேலிய மற்றும் பேஸ்புக், கூகுளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை சுமூக தீர்வை எட்டவில்லை என தெரிகிறது. குறிப்பாக பேஸ்புக் தரப்பில் சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ளுமாறு சொல்லப்பட்டதாக தெரிகிறது. அதை ஆஸ்திரேலியா ஏற்க மறுத்ததோடு சட்டத்தில் எந்தவித திருத்தமும் மேற்கொள்ளப்படாது என திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இதனை ஆஸ்திரேலிய நிதியமைச்சர் சைமன் பர்மிங்காம் தெளிவுபடுத்தியுள்ளார். இந்த சட்டம் அமலுக்கு வந்தால் நாட்டை விட்டு வெளியேறுவோம் என கூகுள் சொன்னதும் குறிப்பிடத்தக்கது. இதே மாதிரியான ராயல்டியை கனடா மற்றும் பிரிட்டன் அரசுகளும் சட்டம் இயற்றி இந்த டிஜிட்டல் தளங்களிடம் பெற திட்டமிட்டு வருகின்றன.
Loading More post
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைத்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி: பறக்குமா ஓவைசியின் பட்டம்?
அமமக கூட்டணியில் ஓவைசியின் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை