தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையை துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை தாக்கல் செய்கிறார். தமிழகம் தேர்தலை சந்திக்க உள்ள நிலையில் மக்களை கவரும் வகையிலான அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
15வது சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனை அடுத்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இது அவர் தாக்கல் செய்யும் 11வது பட்ஜெட். தமிழகம் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள இருப்பதால் மக்களை கவரும் வகையிலான அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்புள்ளது. ஏற்கனவே கொரனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு போதுமான நிதியினை மத்திய அரசு ஒதுக்காதது, கொரோனா நிவாரணமாக குடும்பம் ஒன்றிற்கு ஆயிரம் ரூபாய் , பொங்கல் பரிசு தொகுப்பாக குடும்ப அட்டைத்தாரர்களுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கியது போன்ற நடவடிக்கைகளால் தமிழக அரசு கடன் சுமையில் சிக்கி தவிக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் கடன் சுமை அதிகரித்துக்கொண்டே போகிறது.
அதிமுக அரசு இரண்டாம் முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றபோது 2016-ல் அரசின் கடன் சுமை 2 லட்சத்து 52 ஆயிரத்து 431 கோடி ரூபாயாக இருந்தது. 2017-18 நிதி ஆண்டில் 3 லட்சத்து 14 ஆயிரத்து 366 கோடியாகவும் 2018-19ல் 3 லட்சத்து 55 ஆயிரத்து 844 கோடி ரூபாயாகவும், 2019-20ல் கடன் அளவு 3 லட்சத்து 97 ஆயிரத்து 495 கோடி ரூபாயாக உயர்ந்தது. 2020-21ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசின் கடன் 4 கோடியே 56 லட்சம் ரூபாயாக இருந்தது. 4 லட்சத்து 56 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது இடைக்கால பட்ஜெட்டில் கடன் சுமை 5 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே முதலமைச்சர் பழனிசாமி கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் பயிர்க்கடன்கள் தள்ளுபடி என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். மேலும் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் என்ற அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது. எனவே இத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு பட்ஜெட்டில் இடம்பெறும். இது தவிர மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன் மற்றும் கல்விக் கடன்களை தள்ளுபடியும் செய்ய வேண்டும், பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்தை குறைக்க அவற்றின் மீது மாநில அரசு விதிக்கும் வரிகளை குறைக்க வேண்டும் என உள்ளிட்ட எதிர்பார்ப்புகள் நிலவுவதால் , அது தொடர்பான அறிவிப்பு வெளியாகுமா என மக்கள் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால் புதிய அறிவிப்புகளால் தமிழக அரசின் கடன் சுமை மேலும் அதிகரிக்கும். கடன்சுமைகளை சமாளித்து மக்களின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டிய சவால் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
Loading More post
டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்
"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி
அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி