இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 24-ஆம் தேதி ஆரம்பமாக உள்ள டெஸ்ட் போட்டியில் விளையாட ஆயத்தமாகி உள்ளது. இந்த டெஸ்ட் போட்டி குஜராத்தில் உள்ள அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது. பகல் இரவு ஆட்டமாக இந்த போட்டி நடைபெறுகிறது. இந்நிலையில் அடிலெய்ட் டெஸ்டில் செய்த தவறை திரும்பவும் இதில் செய்ய மாட்டோம் என இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா தெரிவித்துள்ளார்.
“ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் நாங்கள் விளையாடியது முற்றிலும் மாறுபட்ட பகல் இரவு போட்டியாகும். அங்கு பந்து நன்றாக சீம் ஆனது. ஒரே ஒரு மோசமான செக்ஷனில் நாங்கள் செய்த தவறு வீழ்ச்சிக்கு காரணமானது. இருந்தாலும் அந்த போட்டியின் முதல் இன்னிங்சில் நாங்கள் நன்றாகவே விளையாடி இருந்தோம்.
ஆனால் இந்த போட்டியில் அப்படி இருக்காது. கண்டீஷன் தொடங்கி அனைத்தும் எங்களுக்கு பரிச்சயமானதுதான். நாங்கள் சிறப்பாக விளையாடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. கடந்த காலங்களில் நடந்தவற்றை திரும்பி பார்க்க வேண்டிய அவசியமில்லை.
பகல் இரவு ஆட்டமாக இருந்தாலும் கேம் பிளான் எல்லாம் ஒன்றேதான்” எனத் தெரிவித்துள்ளார் புஜாரா.
இந்திய கிரிக்கெட் அணி இதுவரை இரண்டு பகல் இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளது. அதில் வங்கதேசத்திற்கு எதிராக போட்டியில் வெற்றியும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தோல்வியும் சந்தித்துள்ளது.
Loading More post
இந்தியா: 24 மணி நேரத்தில் 2.61 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று!
பிரதமர் மோடி மேற்குவங்க தேர்தலில் பிஸியாக இருக்கிறார் - மகாராஷ்டிரா முதல்வர் குற்றச்சாட்டு
கட்டுக்குள் அடங்காத கொரோனா - கடந்த 10 நாட்களில் தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம் என்ன?
கொரோனாவால் மிகப்பெரிய அளவில் அசம்பாவிதம் நடந்தால் தேர்தல் ஆணையமே பொறுப்பு - மம்தா பானர்ஜி
"கடந்த ஆண்டைபோல கொரோனாவை ஒழிப்போம்" - பிரதமர் மோடி
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி
"விவேக்... உண்மையான ஹீரோ!" - ரஜினி முதல் சூரி வரை... திரைக் கலைஞர்களின் புகழஞ்சலி