வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், ஏழு பேரை விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 11 தீர்மானங்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை வண்டியூரில் அரசியல் எழுச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை வண்டியூரில் அரசியல் எழுச்சி மாநாடு நடைபெற்றது. அதில் திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநாட்டில், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், ஏழு பேரை விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிகழ்ச்சியில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசுகையில், “அயோத்தி பற்றி பேசினால் எடுபடாது என்பதால் அறுபடை முருகனை வைத்து அரசியல் செய்கின்றனர். மோடி வள்ளுவரையும், ஔவையாரையும் பற்றி பேசுவது தமிழ் இனத்தை ஏமாற்றும் மோசடி, தமிழ்மொழி நேசிப்பு என்ற நாடகம். மோடி உலகமகா நடிகர். இந்தியா விற்பனைக்கு என்றும் மட்டும் தான் எழுதவில்லை என்ற அவலம் ஏற்பட்டுள்ளது. அதிமுக தமிழகத்தில் பாஜகவிற்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது. அதிமுகவை பாஜக காலி செய்யப் போகிறது. தமிழகத்தில் பாஜக அதிமுகவின் முதுகில் ஏறி அதிமுகவை அளிக்கும் வேலையை செய்கிறது. மோடியா? லேடியா? என்று ஜெயலலிதா கேட்டதைபோல எடப்பாடியால் கேட்க முடியுமா? ஏன் என்றால் எடப்பாடி கை சுத்தமில்லை என்பதால் அவருக்கு பயம்.” எனத் தெரிவித்தார்.
எழுச்சி மாநாட்டில் கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில் “தங்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென டிஜிபியிடம் மனு அளிக்கும் இந்த அமைச்சர்களா தமிழகத்தை காப்பாற்ற போகிறார்கள்? எடப்பாடி அரசு தமிழகத்தில் ஊழலில்தான் வெற்றி நடைபோடுகிறது. தமிழகத்தில் மோடி தலைகீழாக தண்ணீர் குடித்தாலும் அதிமுக - பாஜக கூட்டணி டெபாசிட் வாங்காது. மோடிக்கு காவடி தூக்கும் எடப்பாடியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்ற நோக்கில் பாடுபடுங்கள்” எனத் தெரிவித்தார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில் “மோடி அரசின் அடக்குமுறையால் உரிமைக்காக போராடுபவர்களை சிறையில் அடைத்து வருகிறது. ஈவு இரக்கமற்ற கொடூர அரசை மோடி நடத்திவருகிறார். சிஏஏவிற்கு எதிராக போராடிய 52 பேரை பலியாக்கியுள்ளார். லட்சக்கணக்கான விவசாயிகள் போராடி வருகிறார்கள். அதனை மோடி கண்டுகொள்ளவில்லை. மோடி அரசு முதலாளித்துவ கார்ப்பரேட் அரசாக மாறிவிட்டது.
ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்ட 13 பேரை சுட்டுகொன்றதற்கு தேர்தலில் பதிலடி கொடுக்க வேண்டும். மோடி அரசுக்கு கொடி பிடிக்கும் அடிவருவி அரசியலை கடைபிடிக்கிறார் எடப்பாடி. காவேரி பாதுகாப்பு மண்டலம் என கூறி மோடி ரசாயன மண்டலத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளார். தமிழகத்தில் அடக்குமுறை அரசு , கொலைகார, கொள்ளைகார அரசாக செயல்படுகிறது. வரும் தேர்தலில் இந்த அரசை தூக்கியெறிய பாடுபட வேண்டும்” என்றார்.
பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதால் பட்டியலின மக்கள் போன்ற ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கான இட ஒதுக்கீடு சலுகைகள் பயனற்றுப் போகும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா தெரிவித்தார்.
Loading More post
மார்ச் 2 முதல் வேட்பாளர் நேர்காணல் - திமுக தலைமை அறிவிப்பு
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா!
''கூட்டணி பற்றி கமலிடம் பேசினோம்; நல்ல முடிவு வரும்'' - சரத்குமார் பேட்டி
புதுக்கோட்டை: தனியார் பேருந்துகள் 3 மடங்கு கட்டணம் வசூலிப்பதாக புகார்... அதிகாரிகள் ஆய்வு!
மநீம - சமக - ஐஜேகே கூட்டணி? கமலுடன் சரத்குமார் சந்திப்பு!
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'