[X] Close >

நிறைவுபெறும் ’D43’ படப்பிடிப்பு; அடுத்து ஹாலிவுட் படத்திற்காக அமெரிக்கா பறக்கும் தனுஷ்!

---Dhanush-43-shooting-completed-Dhanush-flies-to-US-for-next-Hollywood-movie

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் – மாளவிகா மோகனன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புகள் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி நிறைவடைகிறது. அதன்பிறகு, நெட் ஃபிளிக்ஸ் தயாரிக்கும் ’தி க்ரே மேன்’ ஹாலிவுட் படப்பிடிப்புக்காக தனுஷ் அமெரிக்கா செல்லவிருக்கிறார் என்று தகவல் வெளியாக் இருக்கிறது.


Advertisement

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு 8-ம் தேதியுடன் நிறைவடைகிறது. துருவங்கள் பதினாறு படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன், தனுஷ் நடிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறார். சத்திய ஜோதி நிறுவனம் தயாரிக்கும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைத்ராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்று வருகிறது. ஒரு மாதத்திற்கு முன்பு தொடங்கிய படப்பிடிப்பு 8-ம் தேதியுடன் முடிவடைகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

image


Advertisement

ஒரு மாதம் நடைபெற்ற அந்தப் படப்பிடிப்பில் சுமார் 70 சதவீத காட்சிகளை படமாக்கிவிட்டதாகத் தெரிகிறது. மேலும் இறுதிக்கட்ட படப்பிடிப்பை இரண்டு மாதங்கள் கழித்து தொடங்க திட்டமிட்டுள்ளனர். அதற்குள், அமெரிக்காவில் ‘தி க்ரே மேன்’ படத்தில் கலந்துகொள்ள தனுஷ் அமெரிக்கா செல்கிறார்.இப்படத்தை அவெஞ்சர்ஸின்ஃபினிடி வார், எண்ட்கேம் உள்ளிட்டப் படங்களை இயக்கிய ரூஸோ சகோதரர்கள் இயக்குகின்றனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close