[X] Close >

மதுரை விமான நிலையத்திற்கு வந்த சந்தேகத்திற்குரிய பார்சலால் பல மணி நேரம் பரபரப்பு

Suspicious-parcel-arrived-at-Madurai-airport-and-caused-a-stir-for-several-hours

மதுரை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்த சந்தேகத்திற்கிடமான பார்சலால் சுமார் 3 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Advertisement

மதுரை விமான நிலைய சரக்கு முனையத்திற்கு நாகர்கோவிலில் இருந்து ஒரு பார்சல் வந்தடைந்தது. அதனை ஊழியர்கள் ஸ்கேன் செய்தபோது உள்ளே வெடிகுண்டு போன்ற பொருட்கள் இருப்பதாக அபாய ஒலி ஒலித்துள்ளது. ஊழியர்கள் அனைவரையும் வெளியே அனுப்பி விட்டு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், அந்த பார்சலை முழுவதும் வெட்ட வெளிக்கு கொண்டு சென்று சோதனையிட்டனர்.

அதனுள் கடிகாரம், வயர் இணைப்புடன் கூடிய மின்னனு சாதனங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் இருந்துள்ளன. தொடர்ந்து அவை வெடிகுண்டு இல்லை என உறுதிசெய்யப்பட்ட பின்னர் அந்த பார்சல் மீண்டும் தபால் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close