[X] Close >

’கேஜிஎஃப் 2’ வெளியாகும் அன்று தேசிய விடுமுறை அளியுங்கள் - மோடிக்கு யாஷ் ரசிகர்கள் கடிதம்!

KGF-2--Yash-fans-demand-national-holiday-on-film-s-release-date--write-letter-to-PM-Modi

’கேஜிஎஃப் 2’ வெளியாகும் அன்று தேசிய விடுமுறை அளிக்கக்கோரி நடிகர் யாஷ் ரசிகர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.


Advertisement

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் கன்னடத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ’கேஜிஎஃப்’ பிரம்மாண்டமான வசூல் சாதனை செய்தது. அதனைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி அதிலும் வெற்றியை குவித்தது. இந்த வெற்றியால் ’கேஜிஎஃப் 2’ படத்தின் ஷூட்டிங்கை அறிவித்து தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பிலும் ஈடுபட்டு வருகிறது படக்குழு. ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ்,ரவீனா தண்டன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

image


Advertisement

கடந்த 8 ஆம் தேதி யாஷ் பிறந்தநாளுக்கு முதல்நாள் இரவு படத்தின் டீசரை வெளியிட்டது படக்குழு. ஒரே நாளில் மில்லியன் லைக்ஸ், பல கோடி வியூஸ்களை தாண்டிய இந்தியாவின் முதல் படம் என்ற பெருமையையும் பெற்றது.

image

இதனால், இப்போதுவரை டீசர் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. சமீபத்தில் ஜூலை 16 ஆம் தேதி படம் வெளியாகிறது என்று படக்குழு அறிவித்தது. இந்நிலையில், படம் வெளியாகும் அன்று தேசிய விடுமுறை அளிக்கக்கோரி யாஷ் ரசிகர்கள் பிரதமர் மோடிக்கு உருக்கமுடன் கடிதம் எழுதியுள்ளது வைரலாகி வருகிறது. 


Advertisement

“கேஜிஎஃப் 2 ஜூலை 16 வெள்ளிக்கிழமை வெளியாகிறது. இத்திரைப்படத்தை காண மக்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.எனவே, படம் வெளியாகும் அன்று தேசிய விடுமுறை அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். எங்கள் உணர்வுகளை புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். இது படம் அல்ல. எங்கள் உணர்வு” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர் ரசிகர்கள்.

image

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close