“என் மகனைப் போல் யாரும் ஆன்லைன் சூதாட்டத்தில் உயிரிழக்கக் கூடாது” என சூதட்டத்தால் தற்கொலை செய்துகொண்ட எல்வினின் தந்தை உருக்கமாகக் கூறியிருக்கிறார்.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த எல்வின் பிரட்ரிக் என்ற இளைஞர் கோவை மாவட்டம் ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இணையதள சூதாட்டத்தில் ஆர்வமாக விளையாடி வந்த இவர் தொடர்ந்து பணத்தை இழந்து வந்துள்ளார். தமிழக அரசு இணையதள சூதாட்டத்தை தடைசெய்த பிறகும் விளையாட்டைத் தொடர்ந்து வந்த அவர் கடந்த 4ஆம் தேதி வரை 7 லட்சத்து 64 ஆயிரம் பணத்தை இழந்துள்ளதாக தெரியவருகிறது.
இதனால் மனவேதனை அடைந்த அவர் திருப்பூர் வந்து திருப்பூர் - வஞ்சிபாளையம் இடையே உள்ள ரயில் தண்டவாளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பாக தற்கொலை செய்து கொண்ட இவரை அடையாளம் தெரியாத நிலையில் ரயில்வே காவல்துறையினர் அவருடைய புகைப்படத்தை அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்தனர். அடிப்படையில் கோவை பீளமேடு காவல் நிலையத்தில் காணவில்லை என்ற புகாரின் அடிப்படையில் வந்த புகைப்படத்துடன் இவரது புகைப்படமும் ஒத்து போனதால் அடையாளம் காணப்பட்டுள்ளது. தற்போது பிரேத பரிசோதனைக்காக இறந்தவரின் உடல் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இணையதள சூதாட்டத்தில் பணத்தை இழந்து எல்வின் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தனது மகனைப்போல யாரும் ஆன்லைன் சூதாட்டத்தில் உயிரிழக்கக் கூடாது என அவரது தந்தை உருக்கமாகக் கூறியிருக்கிறார்.
Loading More post
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா? இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்
திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி
பாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு நிறைவு?
கலங்க வைக்கும் தேவாவின் கணீர் குரல் - மண்வாசம் வீசும் கர்ணனின் ’பண்டாரத்தி புராணம்’ பாடல்!
வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?