[X] Close >

விபத்தில் சிக்கி துடிதுடித்த தொழிலாளி: வேடிக்கை பார்த்துசென்ற மக்களால் பரிதாபமாகஉயிரிழப்பு

Worker-in-a-road-accident-tragically-killed-by-people-who-saw-the-fun

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது லாரி மோதி விபத்து. விபத்தில் சிக்கிய நபரை யாரும் கண்டுகொள்ளாததால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


Advertisement

image

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ஜெய்சிங் (47). இவர், சாமியார்மடம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று அதிகாலை தனது இருசக்கர வாகனத்தில் மார்த்தாண்டத்தில் இருந்து சாமியார்மடம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.


Advertisement

அப்போது சாங்கை அருகே இவரது வாகனத்தில் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி சாலையில் படுகாயமடைந்து விழுந்து கிடந்தவரை அவ்வழியாக வாகனங்களில் சென்ற யாரும் மருத்துவ மனைக்கு எடுத்து செல்லாமல் வேடிக்கை பார்த்துபடி சென்றுள்ளனர்.

image

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மார்த்தாண்டம் போலீசார் அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதல் உதவி சிகிச்சை வழங்கிய பின் ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.


Advertisement

அங்கு இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். விபத்து நடந்த உடன் அவ்வழியாக வாகனங்களில் வந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருந்தால் அவரது உயிரை காப்பாற்றி இருக்கலாம் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இந்த விபத்து நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் விபத்து நடைபெற்ற காட்சியும் அதன்பின் அவ்வழியாக செல்லும் வாகனங்களில் சென்ற நபர்கள் வேடிக்கை பார்த்து செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close