’மாஸ்டர்’ பட ஷூட்டிங்கின்போது தனது அம்மா சரஸ்வதி, விஜய்யை சந்தித்து ‘என் பையன் நல்லா நடிக்கிறானா?’ என்று கேட்ட சுவாரசிய தகவலை நடிகர் விஜய் சேதுபதி சமீபத்திய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடித்துள்ள ‘மாஸ்டர்’ வரும் பொங்லையொட்டி தியேட்டர்களில் வெளியாகிறது. இதனால், விஜய் மற்றும் விஜய் சேதுபதி, லோகேஷ் கனகராஜ் ரசிகர்கள் ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். விஜய்க்கு வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதி ‘பவானி’ என்ற கேரக்டரில் நடிக்கிறார். மாஸ்டர் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், விஜய், விஜய் சேதுபதியின் புதுப்புது கெட்டப் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது படக்குழு.
இந்நிலையில், சமீபத்தில் விகடனுக்கு பேட்டி அளித்த விஜய் சேதுபதி, ”எனது அம்மா விஜய்யை சந்திக்க ஆசைப்பட்டார். அவரின், அந்த ஆசை எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அதனால், மாஸ்டர் படப்பிடிப்புக்கு அழைத்துச்சென்று விஜய்யை சந்திக்க வைத்தேன். அவருடன் புகைப்படம் எடுத்தபிறகு எனது அம்மா ‘என் பையன் நல்லா நடிக்கிறானா?’ என்று கேட்டார். அதற்கு, விஜய்யும் பாராட்டினார். அவர், பாராட்டியதில் இருவருமே மகிழ்ந்தோம்’ என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே, விஜய்க்கு விஜய் சேதுபதி முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தும் புகைப்படம் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
71 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டே நாளில் முடிவுக்கு வந்த டெஸ்ட் போட்டி
பிராந்திய மொழிகளில் மருத்துவம், பொறியியல் கல்வி பயில அனுமதி - கோவையில் பிரதமர் பேச்சு
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உதயநிதி விருப்பமனு!
மார்ச் 7 ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் : பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
புதுச்சேரியில் அமலுக்கு வந்தது குடியரசுத் தலைவர் ஆட்சி!
ராகுல் காந்தியின் 'வடக்கு - தெற்கு' கருத்து: அதிர்வலையும் விளைவுகளும் - ஒரு பார்வை
“இப்படியா பிட்ச் ரெடி பண்ணுவீங்க”- நரேந்திர மோடி ஸ்டேடியத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்
’வடிவேலு உடல்மொழியை நினைச்சாலே பொழைச்சிக்கலாம்!’ - சிவாங்கி கலகல பேட்டி
திரையும் தேர்தலும் 7: எம்.ஆர்.ராதா தனிப்பாதை; சிவாஜியின் 'நகர்வு'; எம்.ஜி.ஆரின் எழுச்சி!