கரூரில் காதல் பிரச்னையால் இளைஞர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் வஞ்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஹரிஹரன், அப்பகுதி சலூன் கடை நடத்தி வருகிறார். இவரும் அதே பகுதியில் உள்ள மாற்று சமூகத்தைச் சேர்ந்த மீனா என்ற பெண்ணும், கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் இவர்களது காதலுக்கு மீனாவின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கரூர் ஈஸ்வரன் கோயிலுக்கு நண்பர்களுடன் சென்ற ஹரிஹரன், காதலி மீனாவை சந்தித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது பின் தொடர்ந்து வந்த பெண்ணின் உறவினர்கள், ஹரிஹரனை மீனாவின் கண்முன்னே சரமாரியாக குத்திவிட்டு தப்பிச் சென்றனர். பதறிப்போன நண்பர்கள் படுகாயமடைந்தவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஹரிஹரன் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், பெண்ணின் உறவினர்கள் மூவரை கைது செய்துள்ளனர். போலீசார் பெண்ணின் பெரியப்பா சங்கர், மாமா கார்த்திகேயன் மற்றொரு உறவினர் வெள்ளைச்சாமி ஆகிய மூன்று நபர்களை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் ஆணவக் கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காதலியின் உறவினர்களே இந்த கொலையை செய்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
உயிரிழந்தவரின் நண்பர்களும் இந்த காதலுக்கு ஹரிகரன் வீட்டில் ஆதரவு தெரிவித்தாலும் பெண்ணின் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறினர்.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு