சமீபத்தில் நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி குறித்த டிப்ளமோ படிப்பு வணிகவியல் துறையில் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக டெல்லி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
ஒரே நாடு ஒரே வரி என்ற கொள்கையின் அடிப்படையில் இம்மாதம் முதல் தேதி முதல் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டது. எதிர்ப்புகள் மற்றும் வரவேற்புகளுக்கு மத்தியில் அமல்படுத்தப்பட்ட இந்த சட்டத்தில் நான்கு முறையிலான வரிவிதிப்பு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜி.எஸ்.டி குறித்த டிப்ளமோ படிப்புகள் விரைவில் அமல்படுத்த இருப்பதாக டெல்லி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. வணிகவியல் துறையின் கீழ் இந்த டிப்ளமோ படிப்பு கொண்டு வரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இணைய குற்றங்களை தடுக்க கொண்டு வரப்பட்டுள்ள சைபர் சட்டங்கள்
குறித்த முதுகலை டிப்ளமோ படிப்பு அறிவியல் துறையின் கீழ் கொண்டு வரப்படும் எனவும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. கல்வியாண்டுக்கு 100 மாணவர்கள் மேற்கண்ட பிரிவுகளில் சேர்க்கப்படுவார்கள் என்றும் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் தெரிவித்துள்ளார். டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்த முடிவுக்கு
கல்வியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
Loading More post
PTExclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும் தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
ஜெயலலிதா நினைவு இல்லம் ஜன.28ல் திறப்பு - தமிழக அரசு
9 நாட்களில் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு
டிராக்டர் பேரணி: ட்விட்டர் மூலம் குழப்பத்தை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி - உளவுத்துறை
சூடு பிடிக்கும் அரசியல்களம்; அடுத்தக்கட்டத்தில் விவசாயிகள் போராட்டம்.. முக்கியச் செய்திகள்
PTExclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும் தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?