முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், "அதிமுக, பாஜக கூட்டணி தொடர்கிறது" என்றார்.
முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியை பாஜக மாநில தலைவர் எல்.முருகன் இன்று சந்தித்து பேசினார். அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் பாஜகவுடன் கருத்து வேறுபாடு நீடிக்கும் சூழலில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது.
தேசிய ஜனநாயக கூட்டணியே முதல்வர் வேட்பாளரை முடிவு செய்யும் என பாஜகவினர் கூறி வருகின்றனர். ஆனால், எடப்பாடி பழனிசாமியே முதல்வர் வேட்பாளர் என அதிமுகவினர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் கூட்டணி ஆட்சி இல்லை என அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறியிருக்கிறார். அதனால், கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பாஜக மாநில தலைவர் எல்.முருகன், இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தலைமைச்செயலகத்தில் சந்தித்து பேசினார்.
தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்தித்த அவர், புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக பாஜக சார்பில் நடத்தப்பட்ட கையெழுத்து இயக்கத்தின் மூலம் பெற்ற 50 லட்சம் கையெழுத்துக்களை ஒப்படைத்ததாக கூறினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பாஜக - அதிமுக கூட்டணி தொடர்கிறது.புதிய கல்விக் கொள்கையில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. அவர்கள் நடத்தும் பள்ளிகளில் மும்மொழி, நான்கு மொழிக் கொள்கைகள் பின்பற்றப்படுகிறது “ என்றார்.
Loading More post
சுவிட்சர்லாந்து பேட்மிண்டன் ஓபன்: இந்தியாவின் சிந்து காலிறுதிக்கு தகுதி!
இந்தியாவில் அமைதியாக வாழத் தகுதியான நகரங்களில் சென்னை, கோவை இடம்பிடிப்பு!
தமிழகத்தில் ராகுலின் பரப்புரைக்கு தடைகோரி பாஜகவின் எல்.முருகன் கடிதம்
எடப்பாடி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய தனி கவனம் செலுத்தும் திமுக!
“சென்றுவா வெற்றி நமதே! என்று அப்பா சொன்னார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை