தாம்பரம் அருகே பெருங்களத்தூரில் லாரி டிரைவர் தூங்கியதால் அடுத்தடுத்து 2 அரசு பேருந்து உட்பட 4 வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டது.
சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பேருந்து நிலையம் முன்பு சேலத்தில் இருந்து சென்னைக்கு மைதா மாவு ஏற்றி கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது லாரி டிரைவர் வெங்கடாச்சலம் திடீரென கண் அசந்துவிட்டதாக கூறப்படுகிறது. அப்போது பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த 2 அரசு பேருந்துகள் உள்ளிட்ட 4 வாகனங்கள் மீது லாரி மோதி விபத்து ஏற்படுத்தியது. இதில் அரசு பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் சேதமடைந்தன.
மேலும் பெருங்களத்தூர் சிக்னலை கடக்க முயன்ற பொதுமக்கள்மீது லாரி மோதியதில் 3 பேர் படுகாயமடைந்தனர். இதில் பீர்க்கன்காரணை சேர்ந்த பத்மநாபன் என்பவர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார். மேலும் காயமடைந்த அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன், டெல்லிபாபு ஆகியோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கபட்டுள்ளனர்.
விபத்து குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய சேலம் அய்யம்பேட்டையை சேர்ந்த லாரி ஓட்டுநர் வெங்கடாசலத்தை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading More post
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு
"பத்ம விருதுகளை திருப்பியளிக்கவில்லை!" - இளையராஜா விளக்கம்
வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா!
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?