ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஹர்திக் பாண்ட்யா இடம்பெறமாட்டார் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் வரும் 17 ஆம் தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பாண்ட்யா சிறப்பாக விளையாடினார். இந்நிலையில் டெஸ்ட் தொடரில் பாண்ட்யா விளையாடுவாரா என கேள்வி எழுந்தது.
இது குறித்து கேப்டன் விராட் கோலி பதிலளித்துள்ளார். அதில் "பாண்ட்யாவால் தற்போது பவுலிங் செய்ய இயலவில்லை. அவரால் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியும் என்றாலும் டெஸ்ட் கிரிக்கெட்டின் சவால் சற்று வித்தியாசமானது. அதில் அவர் பவுலிங் வீசுவதாக இருந்தால்தான் சரியானதாக இருக்கும். தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து போன்ற வெளிநாட்டு மண்ணில் நடைபெற்ற ஆட்டங்களில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே அவர் சிறப்பாக செயலாற்றினார். இதுகுறித்து நாங்கள் விவாதித்துவிட்டோம்" என்றார்.
மேலும் பேசிய அவர் " இந்திய அணிக்காக அனைத்து ஃபார்மட்டுகளிலுமாக விளையாடும் நிலையில் தற்போது பாண்ட்யா இருக்கிறார். அதேவேளையில், டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இடம்பெற பவுலிங்கிலும் ஃபார்முக்கு வர வேண்டும் என்பதை பாண்ட்யாவே உணர்ந்திருக்கிறார்" என்றார் கோலி.
Loading More post
தீவிரமடையும் கொரோனா இரண்டாம் அலை: பிரதமர் மோடி 8 மணிக்கு அவசர ஆலோசனை!
கணினியுடன் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்ற 3 நிபுணர்கள் யார்? - முக.ஸ்டாலின் ட்விட்
விடைபெற்றார் விவேக்... காவல்துறை மரியாதையுடன் உடல் தகனம்
காவல்துறை மரியாதையுடன் தொடங்கியது நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம்!
விவேக் இறப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி
"விவேக்... உண்மையான ஹீரோ!" - ரஜினி முதல் சூரி வரை... திரைக் கலைஞர்களின் புகழஞ்சலி