ஐபிஎல், சிபிஎல் டி20 லீக்குகளில் அணிகளைக் கொண்டுள்ள தி நைட் ரைடர்ஸ் குழுமம், அடுத்ததாக அமெரிக்க டி20 லீக் போட்டியிலும் பங்குபெறவுள்ளது.
ஷாருக்கான், ஜூஹி சாவ்லா மற்றும் அவருடைய கணவர் ஜெய் மேத்தா ஆகியோர் இணைந்து தி நைட் ரைடர்ஸ் நிறுவனத்தை உருவாக்கி ஐபிஎல், சிபிஎல் டி20 லீக்குகளில் அணிகளின் உரிமையாளர்களாக உள்ளார்கள். ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சிபிஎல் போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளைக் கொண்டுள்ளார்கள். 2022 முதல் அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட் என்கிற எம்எல்சி டி20 போட்டி தொடங்கவுள்ளது.
இந்தப் போட்டியில் தி நைட் ரைடர்ஸ் அணியும் இடம்பெறவுள்ளது. ஆறு அணிகள் பங்குபெறும் எம்எல்சி டி20 போட்டியின் ஆலோசகர்களாக தி நைட் ரைடர்ஸ் செயல்படப் போகிறது. ஒரு நிறுவனம் - ஐபிஎல், சிபிஎல் போட்டிகளில் ஓர் அணியின் உரிமையைப் பெற்று செயல்படவேண்டும். ஆனால் எம்எல்சி போட்டியில் பங்குபெறும் அனைத்து அணிகளும் போட்டிக்காக முதலீடு செய்து அதில் பங்களிக்க வேண்டும்.
இதனால் அனைத்து அணிகளும் போட்டியின் பங்குதாரர்களாக இருப்பார்கள். அமெரிக்கன் கிரிக்கெட் எண்டர்பிரைசஸ் என்கிற ஏசிஇ நிறுவனம், யூஎஸ்ஏ கிரிக்கெட் அமைப்புடன் இணைந்து எம்எல்சி போட்டியை நடத்தவுள்ளது.இதுபற்றி நைட் ரைடர்ஸ் அணியின் நிர்வாக இயக்குநர் வெங்கி மைசூர் ஒரு பேட்டியில் கூறும்போது "எம்எல்சி போட்டியில் ஓர் அணியாக மட்டும் எங்களைப் பார்க்காமல் ஆலோசகர்களாகவும் கருதுகிறார்கள். அமெரிக்காவின் கிரிக்கெட் வளர்ச்சிக்குப் பெரிய அளவில் திட்டமிட்டு பணிகள் நடைபெறவுள்ளன" என்றார்.
மேலும் "அங்குள்ள வசதிகளை மேம்படுத்தி, அடுத்த சில வருடங்களில் ஆறு கிரிக்கெட் மைதானங்களை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளோம். உலகக் கோப்பை உள்ளிட்ட பெரிய போட்டிகளை அமெரிக்காவில் நடத்த வேண்டும் என்பது குறிக்கோளாக உள்ளது. அமெரிக்காவில் விளையாட்டுக்கான நல்ல சூழல் உள்ளது" என்றார் அவர்.
Loading More post
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர் மரணம்: காரணம் வேறு என்கிறது உ.பி அரசு
நீதிபதிகள் நியமனம் குறித்த குருமூர்த்தி பேச்சு: சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
“ராஜினாமா செய்துவிட்டு எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம்”- ரஜினி மக்கள் மன்றம்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 447 பேருக்கு பாதகமான பக்க விளைவு: சுகாதார அமைச்சகம்
பழைய பஸ் பாஸ் மூலம் மாணவர்கள் பயணிக்கலாம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்