[X] Close >

''இப்படி பண்ணா.. நாங்க கிளம்பிடுவோம்'' - பாக் அரசை எச்சரிக்கும் ஃபேஸ்புக், கூகுள்!

Social-media-Threaten-To-Leave-Pakistan-After-Imran-Govt-Bins-Their-Privacy

கடுமையான விதிகளை தளர்த்தாவிட்டால் பாகிஸ்தானை விட்டே வெளியேறும் நிலை ஏற்படும் என ஃபேஸ்புக், கூகுள், ட்விட்டர் போன்ற நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.


Advertisement

சமூக வலைதளங்களுக்கு பாகிஸ்தான் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க முயற்சிப்பதால் ஃபேஸ்புக், கூகுள் போன்ற நிறுவனங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன. இப்படியே செய்தால் பாகிஸ்தானை விட்டே வெளியேறும் நிலை ஏற்படும் என ஃபேஸ்புக், கூகுள், ட்விட்டர் போன்ற நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

பாகிஸ்தானில் ஆளும் இம்ரான்கான் அரசு சமூக வலைதளங்களுக்கு கடுமையான விதிமுறைகளை விதித்துள்ளன. சமூக வலைதள நிறுவனங்களை பாகிஸ்தானில் அமைக்க வேண்டும், தரவுகளை பாகிஸ்தானிலேயே சேகரிக்க வேண்டும், சமூக வலைதளங்களை அரசு அதிகாரிகள் கட்டுப்படுத்தும் விதத்திலான விதிமுறைகள் என பல விதிகளை ஏற்படுத்தியது பாக் அரசு. விதிமுறைகள் கடைபிடிக்கப்படாவிட்டால் அதிக அளவிலான அபராதம் செலுத்த நேரிடும் என்றும் செக் வைத்துள்ளது பாகிஸ்தான்.


Advertisement

image

இம்ரான்கான் அரசின் குடச்சல் சமூக வலைதள நிறுவனங்களுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் விதிமுறைகளை கடைபிடிப்பது சாத்தியமில்லாத ஒன்று என தெரிவித்துள்ளன. பாகிஸ்தான் தங்களது நிலைப்பாட்டில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும், விதிமுறைகள் கட்டாயம் என முரண்டு பிடித்தால் தாங்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும் ஃபேஸ்புக், கூகுள், ட்விட்டர் போன்ற நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. சீனா போலவே தனித்து செயல்பட பாகிஸ்தான் முயற்சி செய்வதாக சமூக வலைதள நிறுவனங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

image


Advertisement

சோஷியல் மீடியாக்களில் கோரிக்கையை ஏற்று பாக் அரசு விதிமுறைகளில் தளர்வு கொண்டு வருமா? அல்லது எச்சரித்தது போலவே பாகிஸ்தானை சோஷியல் மீடியாக்கள் தலைமுழுகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close