புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசியின் மெலிந்த புகைப்படம் அதிர்ச்சியையும் சோகத்தையும் உண்டாக்கி இருக்கிறது.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் துணை நடிகராக நடித்தவர் தவசி. தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அவர், மக்களிடத்தில் உதவி கோரியிருக்கிறார்.
நான் கடவுள், ஜில்லா, வீரம், சுந்தரபாண்டியன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் தவசி. கடந்த 2013 ஆம் ஆண்டு சிவக்கார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் சூரியின் அப்பாவாக தவசியின் 'கருப்பன் குசும்புக்காரன்' காமெடி ரசிகர்கள் மத்தியில் பிரபலம்.
தற்போது, உணவுக்குழாய் புற்றுநோயோடு போராடும் தவசி தெற்கத்தி உடல்வாகும், முறுக்கிய மீசையுமாய் அந்த மண்ணுக்குரிய மொழியோடு திரையில் தோன்றுவது தமிழ் சினிமாவின் எல்லா ரசிகர்களுக்கும் பரிச்சயம்.
சமீப காலமாக உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரை சரவணா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர், திரைத்துறையினரோ, அரசோ தனக்கு உதவிக்கரம் நீட்ட மாட்டார்களா என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்.
இந்நிலையில், தவசியை தனது மருத்துவமனையில் அனுமதித்து இலவச சிகிச்சையும் அளித்து பேருதவி புரிந்திருக்கிறார், திருப்பரங்குன்றம் திமுக எம்.எல்.ஏ டாக்டர் சரவணன். அவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
Loading More post
ஆபத்தான முன்னுதாரணம்!- POCSO கீழான பாலியல் வழக்கில் மும்பை ஐகோர்ட் தீர்ப்பு நிறுத்திவைப்பு
’’அம்மாவின் ஆட்சியமைக்க வீர சபதம் ஏற்போம்’’ - முதலமைச்சர் பழனிசாமி
ஜெயலலிதாவுக்கு தீர்க்க முடியாத நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்: ஓபிஎஸ் - வீடியோ
சசிகலா விடுதலையை கொண்டாடவே ஜெயலலிதா நினைவிடம் திறப்பு - டிடிவி தினகரன்
விவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா? - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு!
விவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா? - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு!
முல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது? - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்!
டெல்லி டிராக்டர் பேரணிக்கு ஆதரவு: தமிழகத்தின் பல இடங்களில் விவசாயிகள் பேரணி!
PT Exclusive: "ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது!" - ராகுல் காந்தி நேர்காணல்
சசிகலா பதவியேற்புக்கு எதிர்ப்பு.... பதவியை ராஜினாமா செய்த நிர்வாகிகள்..!