சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் கனமழை

heavy-rain-from-tomorrow-morning-in-chennai

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.


Advertisement

image

வங்கக் கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக கிழக்கு திசை காற்று உள்ளே நுழைந்ததால் சென்னையில் பல பகுதிகளிலும் மழை கொட்டித் தீர்க்கிறது. மீனம்பாக்கம், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அண்ணா நகர், திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, ராயப்பேட்டை, மெரினா, ராயபுரம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட நகர் பகுதிகளிலும், தாம்பரம், கேளம்பாக்கம், கூடுவாஞ்சேரி, வண்டலூர், செங்குன்றம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் அதிகாலை 4 மணி முதல் கனமழை பெய்து வருகிறது. இதேபோல் சென்னையில் இன்றும், நாளையும் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், குமரிக்கடல் முதல் அந்தமான் கடல் பகுதி வரை நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement