[X] Close >

போலி விளம்பரம் மூலம் பெண்ணிடம் நூதன மோசடி: தம்பதியர் கைது

Fake-advertisement-Couple-arrested-for-stealing-jewelery-from-a-woman

போலி விளம்பரம் கொடுத்து பெண்ணின் நகைகளை திருடிச் சென்ற தம்பதியினரை போலீசார் கைது செய்துள்ளனர்.


Advertisement


சென்னை துரைபாக்கம் காவல் நிலையத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மினிமோல் என்பவர்; புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கன்னியாகுமரியில் பரக்காவட்டுவிளை என்ற ஊரில் வசித்து வருவதாகவும் தான் நியூஸ் ரீடர் பணி தேடி கிண்டியில் தன் தோழிகளுடன் கடந்த 10 நாட்களாக தங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

 


Advertisement

image


இந்நிலையில்  சமூக வலைதளத்தில் சினிமாவில் நடிக்க மற்றும் செய்தி வாசிக்கும் நியூஸ் ரீடர் பணிக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரம் வந்துள்ளது. அதை பார்த்து அதில் குறிப்பிட்ட தொலைபேசி எண்ணிற்கு தான் தொடர்பு கொண்டதாகவும் அப்போது தன்னிடம் பேசிய ஒருவர், நீயூஸ் ரீடர் வேலைக்கு ஆட்கள் தேவைபடுவதாக கூறி தி. நகரில் இருந்து துரைபாக்கம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் அறைக்கு மேக்கப் ஒத்திகை செய்ய வேண்டும் என்று சொன்னார்.


அதைத் தொடர்ந்து ஒரு பெண்ணை அழைத்து வந்து மேக்கப் செய்ய நகைகளை கழட்டி வைத்து விட்டு முகத்தை கழுவி வருமாறு கூறியதாகவும் பின்னர் தான் கழிவறைக்கு சென்றதும் தன்னை அங்கேயே பூட்டி வைத்து விட்டு தன்னுடைய நகைகளை எடுத்து சென்று விட்டதாகவும் பின்னர் தான் கதவை தட்டும் சத்தத்தை கேட்டு விடுதி மேலாளர் வந்து மீட்க தான் ஏமாற்றபட்டு இருப்பதை தெரிந்து கொண்டதாகவும் புகார் அளித்துள்ளார்.


Advertisement

 

image


அதன் பேரில் துணை ஆணையாளரின் தனிப்படையினர் புகார்தாரரை தொடர்பு கொண்ட செல்போன் எண்கள் மற்றும் ஹோட்டலில் பதிவான சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்து பார்த்து அதில் கிடைத்த தடயங்களை கொண்டு எதிரிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் பாலவாக்கம் குப்பம் பகுதியில் வசித்து வந்த தேனி பண்ணைபுரம் பகுதியை சேர்ந்த ராவின் பிஸ்ட்ரோ என்ற நபரையும் திருவான்மியூர் பகுதியை சேர்ந்த தீபா (எ) செண்பகவள்ளி என்பவரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ராவின் பிஸ்ட்ரோ என்பவர் மேடவாக்கம், வேளச்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள தலப்பாகட்டி ஹோட்டலில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார்.


பின்னர் அந்த வேலை விட்டு விட்டு, ஏற்கெனவே திருமணமாகி இரு மகன்கள் இருக்கும் நிலையில் தன் கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்த தீபாவை ராவின் பிஸ்ட்ரோ இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு பாலவாக்கம் குப்பத்தில் வசித்து வருவதாக தெரிவித்தனர். மேலும் தீபா நீலாங்கரை காவல் நிலையம் மற்றும் திருவான்மீயூர் காவல் நிலையத்தில் 8 வருடங்களுக்கு முன்பு ஊர்காவல் படையில் பணிபுரிந்து வந்திருப்பதும் போலீசாருக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

image


இந்நிலையில் இருவரும் மேன் பவர் ஏஜென்சி என்ற பெயரில் வீட்டு வேலைக்கு தேவைப்படும் ஆட்களை ழுடஒ மூலம்; கண்டறிந்து அவர்களை வேலைக்கு சேர்த்து விட்டுள்ளனர். இந்நிலையில் அதிக வருமானத்திற்கு ஆசைபட்டு சினிமா மற்றும் செய்தி வாசிப்பாளராக வேலைக்கு ஆட்கள் தேவை என பொய்யாக வேலைக்கு விளம்பரம் அளித்தாகவும், அதைத் தொடர்ந்து தன்னை தொடர்பு கொண்ட பெண்மணியை ஏமாற்றி நகைகளை திருடிச் சென்றதாகவும் கூறியுள்ளனர்.


நூதன முறையில் கவனத்தை திசை திருப்பி மோசடியில் ஈடுபட்ட நபர்கள் இருவரையும் கைது செய்த தனிப்டையினர் அவர்களிடம் இருந்து மோசடி செய்த நகைகளையும் மீட்டனர். பின்னர் இருவரையும் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனர்.


பொது மக்கள் வேலை வாங்கி தருவதாக வரும் விளம்பரங்களின் உண்மைதன்மையை உறுதி செய்து கொள்ளுமாறும் வேலைவாய்ப்பிற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களை நேரடியாக அணுகுமாறும் இதுபோன்ற மோசடி நபர்களை நம்பி ஏமாற வேண்டாம் என அடையார் துணை ஆணையர் விக்ரமன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close