தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து இன்று முதல்வர் அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவம்பர் 16 ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார். முதல்வரின் இந்த முடிவுக்கு பெற்றோர்கள், கல்வியாளர்கள், எதிர்கட்சியினர் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கொரோனா பரவலுக்கு மத்தியில் பள்ளிகளை திறக்கக் கூடாது என வலியுறுத்தினர். இதனையடுத்து பள்ளிகளை திறக்கலாமா வேண்டாமா என மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்துக் கேட்பு நடைபெற்றது. இதில், 45 சதவிகித பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பது குறித்து கருத்து தெரிவித்ததாகவும், அதனடிப்படையில், இன்றைக்குள் முதல்வர் அறிவிப்பை வெளியிடுவார் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.
இதனிடையே பள்ளிகள் திறப்பு அறிவிப்பை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில், டிசம்பருக்குப் பின் பள்ளி, கல்லூரிகளைத் திறக்கலாமே என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்திருந்தது. மேலும் பெரும்பாலான பெற்றோர் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க விருப்பம் தெரிவிக்கவில்லை எனவும் அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெற்றோர்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் பள்ளிகள் திறப்பில் முடிவெடுக்கப்படும் என கூறினார். அதன்படி பள்ளிகள் திறப்பது குறித்த அறிவிப்பை முதல்வர் இன்று வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Loading More post
தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்கக் கூடாது: ஐகோர்ட்டில் மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல்
சமூக வலைதள நிறுவனங்களுக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்த மத்திய அரசு!
“எரிபொருள் விலையின் மீதான வரி குறைப்பை அரசுகள் ஒருங்கிணைக்க வேண்டும்”- சக்தி காந்த தாஸ்
பெண் எஸ்பி பாலியல் புகார்: மேலும் 2 காவல் அதிகாரிகள் சிக்குகிறார்கள்?
அப்போது பெட்ரோல்... இப்போது சிலிண்டர்... - சிலிண்டருக்கு இனி வாரம்தோறும் விலை நிர்ணயமா?
அப்போது பெட்ரோல்... இப்போது சிலிண்டர்... - சிலிண்டருக்கு இனி வாரம்தோறும் விலை நிர்ணயமா?
9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: அக்கறையா, அரசியல் ஆதாயமா? - ஒரு பார்வை
"இவ்வளவு வரவேற்பு கிடைக்கும்னு நினைக்கல!" - நிச்சயதார்த்த மோதிரத்தில் திருக்குறள்
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?