"இந்தியர்கள் காஷ்மீரில் குடியேறினால் பாலியல் வன்கொடுமை அதிகரிக்கும்" சர்ச்சையான பேச்சு

PDP-leader-shocks-a-day-after-Centre-amends-land-laws--suggests-rapes-will-increase-if-Indians-settle-in-J-K

இந்தியர்கள் அனைவரும் ஜம்மு காஷ்மீரில் நிலம்வாங்கலாம் என்ற சட்டம் நடைமுறைக்கு வந்தால் இங்கு பாலியல் வன்கொடுமை அதிகரிக்கும் என்ற தனது கருத்துக்கு விளக்கமளித்துள்ளார் பிடிபி தலைவர் சுரிந்தர் சவுத்ரி.


Advertisement

image

மத்திய அரசு சட்டங்களைத் திருத்தி நாடு முழுவதும் உள்ள மக்கள் ஜம்மு-காஷ்மீரின் யூனியன் பிரதேசத்தில் நிலம் வாங்க அனுமதியளித்த பிறகு, பிடிபி தலைவரான சுரிந்தர் சவுத்ரி, நாட்டில் உள்ள அனைவரும் ஜம்மு-காஷ்மீரில் நிலம் வாங்கினால் இங்கும் பாலியல் வன்கொடுமைகள் அதிகரிக்கும் என்று சர்ச்சைக்குரிய கருத்தினை கூறினார்.


Advertisement

இந்த கருத்து குறித்து விமர்சனங்கள் எழுந்த பிறகு விளக்கமளித்த அவர் “ஜம்முவுக்கு உயர்ந்த டோக்ரா கலாச்சாரம் மற்றும் மரபு உள்ளது, நாங்கள் நாட்டிற்காக பல தியாகங்களை செய்துள்ளோம். வெளியாட்கள் இங்கு குடியேற வந்தவுடன் பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்களைத் தொடங்குவார்கள் என்று நாங்கள் கூறவில்லை. அஸ்ஸாம் மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் கூறுவதையே நாங்களும் கூறுகிறோம், மக்கள் வெளியில் இருந்து வரக்கூடாது ஏனெனில் அவர்கள் எம் மக்களின் வேலை வாய்ப்புகளை பறிப்பார்கள் என்றே கூறுகிறோம்”என்று சவுத்ரி கூறினார்

“இன்று ஜம்மு பகுதி மிகவும் அமைதியானது. இங்கே ஜம்முவில் பெண்கள் படிக்க பல்வேறு கிராமங்களிலிருந்து வருகிறார்கள். ஒரு பெண் சுட்டுக் கொல்லப்பட்ட ஃபரிதாபாத்தில் என்ன நடந்தது என்பதையும், ஹத்ராஸில் என்ன நடந்தது என்பதையும் நீங்கள் காணலாம்.நாட்டில் கற்பழிப்பு வழக்குகள் அதிகரித்து வருகின்றன. இவை அனைத்தும் தேசிய தொலைக்காட்சியில் காண்பிக்கப்படுகின்றன, அதன்பொருட்டே அப்படி கூறினேன்”என்றும் அவர் கூறினார்.

 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement