"அராஜகங்களுக்கு நாங்கள் தலைவணங்கமாட்டோம்": கைதுக்கு பின் குஷ்பு ட்வீட்

We-will-never-bow-down-to-the-atrocities-of-few-elements-out-there-says-kushbu

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க காரில் சிதம்பரம் புறப்பட்டுச் சென்ற குஷ்புவை முட்டுக்காடு அருகே காவல்துறையினர் கைது செய்தனர்.


Advertisement

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள குஷ்பு, "விடுதலைச் சிறுத்தைகள் கோழைகள். நீங்கள் மகிழ்ச்சி அடையவேண்டாம். இது உங்களுடைய தோல்வி. நாங்கள் தலைவணங்க மாட்டோம். பிரதமர் நரேந்திர மோடி, இந்த மண்ணில் உள்ள ஒவ்வொரு மகளின் மரியாதையை உறுதிசெய்ய அடியெடுத்து வைக்கிறார். விசிகவினருக்கு பெண்களை மதிப்பது அந்நியமாக இருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ட்வீட் செய்துள்ள குஷ்பு, "பெண்களின் மரியாதைக்காக கடைசி மூச்சு உள்ளவரை போராடுவோம். மதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பெண்களின் பாதுகாப்புப் பற்றி எப்போதும் பேசிவருகிறார். அவருடைய பாதையில் நாங்கள் நடக்கிறோம். சிலரின் அராஜகங்களுக்கு நாங்கள் தலைவணங்கமாட்டோம். "


Advertisement

பெண்களுக்கு எதிராக திருமாவளவன் பேசியதாக பாஜகவினர் மாநில அளவில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில் சிதம்பரம் பாஜக மகளிர் அணியினரும் போராட்டம் அறிவித்தனர். ஆனால் அதற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை.

பாஜக போராட்டத்திற்கு பங்கேற்க சென்ற குஷ்பு கைது.!

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement