அட்டகாசமான கேட்ச்: அனைவரையும் வாயை பிளக்க வைத்த ஆர்ச்சர்!

Kartik-Tyagi-to-Ishan-Kishan--out-Caught-by-Jofra-Archer

மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஆர்ச்சர் அட்டகாசமான கேட்சை பிடித்து வீரர்கள் உட்பட அனைவரையும் வாயை பிளக்க வைத்துள்ளார்.


Advertisement

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபுதாபி மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தி வருகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபாரமாக பந்து வீசி வருகிறது. ஆர்ச்சர் சிறப்பான பங்கை அளித்து வருகிறார்.

அந்த வகையில் தான் வீசிய முதல் ஓவரிலேயே அதிரடி நாயகன் டிகாக் விக்கெட்டை கைப்பற்றினார். ஆர்ச்சர் வீசிய பந்து டிகாக்கின் பேட்டில் இன்சைடு எட்ஜ் பட்டு போல்டானது.


Advertisement

image

இதைத்தொடர்ந்து பத்தாவது ஓவரை கார்த்திக் தியாகி வீசினார். இஷான் கிஷனும் சூரியக்குமார் யாதவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். அப்போது தியாகி வீசிய பந்து இஷான் கிஷன் பேட்டில் பட்டு சிக்ஸ் லைனுக்கு பறந்தது. அனைவரும் சிக்ஸ் சென்று விடும் என எதிர்பார்த்திருந்த நிலையில் அங்கு நின்றுகொண்டிருந்த ஆர்ச்சர் பின்புறமாக மேலே தாவி பந்தை அட்டகாசமாக பிடித்து கீழே விழுந்தார். இதைப்பார்த்த அனைத்து வீரர்களும் வாயை பிளந்து ஆச்சர்யப்பட்டனர்.

https://www.iplt20.com/video/222005/archer-s-unbelievable-one-handed-catch


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement