சீர்காழி அருகே மகன் கொலை செய்யபட்டதால் துக்கத்தில் இருந்த தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே எடமணல் பகுதியை சேர்ந்த சேகர் என்பவரின் மகன் சந்தோஷ். இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சென்னை செல்வதாக கூறி சென்றவர் மாயமானார். அவரை உறவினர்கள் தேடிவந்த நிலையில், சிதம்பரம் கடலூர் புறவழிச்சாலை அருகே உள்ள வயல் பகுதியில் கை, கால் கட்டப்பட்டு கொலை செய்யபட்டு சடலமாக கிடந்தார்.
வழக்குப் பதிவு செய்த சிதம்பரம் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் சந்தோஷை பெண் பார்க்க அழைத்துச் செல்வதாக ஆசை வார்த்தை கூறி அவரது நண்பர்களே பணத்துக்காக கொலை செய்ததை கண்டு பிடித்தனர். இதனையடுத்து கொலையாளிகள் மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், இன்று சந்தோஷ் இறந்து 10ஆம் நாள் துக்க நிகழ்வும் படத்திறப்பும் நடைபெற இருந்தது. மகன் இறந்த துக்கத்தில் தொடர் மனஉளைச்சலில் இருந்த அவரது தந்தை சேகர் நேற்று நள்ளிரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகன் இறந்து 10வது நாளிலேயே தந்தையும் இறந்தது உறவினர்களையும் கிராம மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சேகரின் உடலை கைப்பற்றிய சீர்காழி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?