[X] Close >

சீனாவின் எல்லைக்குள் ஜம்மு - காஷ்மீர்.. சர்ச்சையில் சிக்கிய ட்விட்டர்..!

Twitter-under-fire-as-it-shows-Jammu-and-Kashmir-as-part-of-China
ஜம்மு-காஷ்மீரை சீனாவின் ஒரு பகுதியாக ட்விட்டர் காட்டியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
 
ஞாயிற்றுக்கிழமை ஜம்மு காஷ்மீர் பகுதியிலிருந்து ட்விட்டரில் நேரலை செய்யப்பட்ட ஒரு வீடியோவில் தவறான ஜியோடேக் இடம்பெற்றிருந்தது. அந்த வீடியோவில் தோன்றிய ட்விட்டர் ஜியோடேக்கின்படி ஜம்மு மற்றும் காஷ்மீர் சீனாவின் பகுதியாகக் காட்டப்பட்டிருந்தது. இது நெட்டிசன்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ட்விட்டர் இந்தியா மீது நடவடிக்கை எடுக்குமாறு, பல நெட்டிசன்கள் ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோரை டேக் செய்து ட்விட் செய்து வந்தனர். 
 
image
 
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ட்விட்டர் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. அதில், "இந்த தொழில்நுட்ப சிக்கலை ஞாயிற்றுக்கிழமைதான் நாங்கள் கண்டறிந்தோம். இது எவ்வளவு உணர்வுப்பூர்வமான விஷயம் என்பதை நாங்கள் புரிந்துகொண்டு மதிப்பளிக்கிறோம். ஜியோடேக் சம்பந்தப்பட்ட சிக்கலை விசாரிக்கவும் தீர்க்கவும் எங்கள் குழுவினர் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close