நிலப் பிரச்சனையால் ஏற்பட்ட மோதல்: 55வயது பெண் அடித்துக் கொலை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஓமலூர் அருகே இரண்டு குடும்பத்திற்கு இடையே ஏற்பட்டு வந்த நிலப் பிரச்சனையால் ஏற்பட்ட மோதலில் 55 வயது பெண் அடித்து கொலை செய்யப்பட்டார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement

 

image


Advertisement


சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காடையாம்பட்டி தாலுகாவில் உள்ள கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் கோட்டைமேடு கிராமம் உள்ளது. இப்பகுதியை சேர்ந்தவர் சென்னிமலை. இவரது மனைவி மல்லியம்மாள். இவர்கள் இருவரும் அதே பகுதியில் விவசாயம் செய்து வருகின்றனர்.


இவர்களது விவசாய தோட்டத்திற்கு அருகே பக்கத்து வீட்டில் வசிக்கும் கிருஷ்ணன் என்பவரின் நிலம் உள்ளது. இந்த நிலையில் சென்னிமலை குடும்பத்தாருக்கும், கிருஷ்ணன் குடும்பத்தாருக்கும் இடையே கடந்த பல ஆண்டுகளாக நிலப் பிரச்சனை இருந்து வருகிறது. இதனால் இரண்டு குடும்பத்தாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

 


Advertisement

image


இந்நிலையில் இந்த தகராறு மோதலாக மாறி, கிருஷ்ணன் அவரது மனைவி ரஞ்சிதம் மகன்கள் அசோகன், பொன்னுவேல், விஜயன் ஆகியோர் சேர்ந்து சென்னிமலையின் மனைவி மல்லியம்மாளை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதில், தலையில் படுகாயமடைந்த மல்லியம்மாள் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.


அவரை மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மல்லியம்மாள் உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த தீவட்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மல்லியம்மாளை அடித்து கொலை செய்த குடும்பத்தினர் தலைமறைவாகி உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement