ஆசிரியை தாக்கியதால் காயமடைந்த மாணவர் உயிரிழப்பு?

student-death-in-medavakkam-due-to-teacher-attack

சென்னையில் 8 மாதங்களுக்கு முன்பு அரசுப் பள்ளி ஆசிரியை தாக்கி மாணவர் ஒருவர் காயமடைந்தார். அவர் தற்போது உயிரிழந்துள்ளார். இந்நிலையில் ஆசிரியை தாக்கியதால்தான் மாணவர் உயிரிழந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்


Advertisement

மேடவாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்த மாணவர் கார்த்தி, கடந்த‌ பிப்ரவரி மாதம் தமிழ் ஆசிரியர் உமாமகேஸ்வரி இரும்பு ஸ்கேலால் அடித்ததில் காயமடைந்தார். கண்ணுக்கு செல்லக்கூடிய நரம்பு பாதிக்கப்பட்டதால் , இடது கண் பார்வை பறிபோனது.

image


Advertisement

மேலும் கார்த்திக்குக்கு புற்றுநோய் இருப்பதாகவும், தலையில் அடிபட்டதால் மூளை நரம்புகள் துண்டிக்கப்பட்டு கண் வழியே ரத்தம் வந்துகொண்டிருந்ததாகவும், குழாய் மூலம் ரத்தத்தை வெளியேற்றி வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் வீட்டில் இருந்த கார்த்திக், படுக்கையிலேயே உயிரிழந்தார். ஆசிரியை தாக்கியதால்தான், கார்த்திக் மரணமடைந்ததாக அவரது பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement