16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்

Rain-may-chances-over-tamilnadu

தமிழகத்தில் மதுரை, தேனி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. 16 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Advertisement

வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் மூன்று மணி நேரத்திற்கு மேலாக இடி, மின்னலுடன் கனமழை பெய்ததால், பல இடங்களில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் நீர் தேங்கியது. தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் பரவலாக மழை பெய்தது. பகலில் வெப்பம் அதிகமாக இருந்த நிலையில், சோத்துபாறை அணை, கும்பக்கரை, முருகமலை உள்ளிட்ட இடங்களில் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை விட்டுவிட்டு மழை பெய்தது. தேனி, அல்லிநகரம், லட்சுமிபுரம், பழனிசெட்டிபட்டி, கண்டமனூர், பூதிப்புரம் உள்ளிட்ட பகுதிகளிலும் 3 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.

image


Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்ததால், தேவசமுத்திரம் ஏரி ஏற்கனவே முழுகொள்ளளவை எட்டியிருந்தது. மீண்டும் மழை தொடந்த நிலையில் ஏரியை ஒட்டியுள்ள பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.தருமபுரி மாவட்டம் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அதேபோல் விருருநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் விழுப்புரம் மாவட்டம் அரக்காணம் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மற்றும் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.

image


Advertisement

இதனிடையே திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தரு‌மபுரி, ராணிப்பேட்டை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 3 நாட்களுக்கு அந்தமான் மற்றும் மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

Related Tags : RainRain chennaichennai rainrain tamilnaduமழை
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement