சாலை விபத்தில் உயிரிழந்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் நஜீபுல்லா தராகை சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். 


Advertisement

image

கடந்த வெள்ளிக்கிழமையன்று கிழக்கு நான்கர்ஹார் பகுதியில் உள்ள சாலை ஒன்றை அவர் கடக்க முயன்றபோது, அந்த வழியாக வேகமாக சென்ற கார்மோதியதில் பலமாக காயம்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.


Advertisement

அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.  29 வயதான நஜீபுல்லா தராகை இதுவரை ஆப்கானிஸ்தான் அணிக்காக 12 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 

அவரது இழப்பிற்கு கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நஜீபுல்லா உயிரிழப்பிற்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement