வேலூர்: தந்தை மற்றும் 7 வயது மகள் படுகொலை - போலீசார் விசாரணை.!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வேலூர் மாவட்டம் அணைகட்டு அருகே தந்தையும் மகளும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகளை தேடும் பணியை காவல்துறையினர் முடுக்கிவிட்டுள்ளனர்.


Advertisement

image

வேலூர் மாவட்டம், ஜார்த்தான்கொல்லை கந்திபுதூர் மலை கிராமத்தை சேர்ந்தவர்கள் பொன்னுசாமி- பாஞ்சாலை தம்பதியினர். இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகள் உள்ளார். கடந்த 25 ஆண்டுகளாக வேப்பங்குப்பம் ரங்கன் கொட்டாய் பகுதியிலுள்ள அன்ஷர்பாஷா என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் பொன்னுசாமி, காவலாளியாக பணியாற்றிவந்தார். இந்நிலையில் இன்று காலை பொன்னுசாமியும், அவரது மகளும் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.


Advertisement

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வேலூர் சரக டிஐஜி காமினி உள்ளிட்டோர் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொன்னுசாமியின் மனைவி பாஞ்சாலை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் என்ன நடந்தது என்ற விவரங்கள் அவருக்கு தெரியவில்லை. பொன்னுசாமியை மர்மகும்பல் வெட்டவரும்போது, அவரது மகள் தடுத்ததால் அவரையும் வெட்டிக் கொன்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலையாளிகளை தேடும் பணியை காவல்துறையினர் முடுக்கிவிட்டுள்ளனர்.

 

loading...

Advertisement

Advertisement

Advertisement