22 மணி நேர அறுவை சிகிச்சை... மரணத்தின் விளிம்புவரை சென்றவரை காப்பாற்றிய மருத்துவக்குழு..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அபுதாபியில் ஆசிரியர் ஒருவருக்கு இதய அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவர்கள், அவரை 22 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு காப்பாற்றியுள்ளனர்.


Advertisement

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் முஹம்மது அர்ஷத் (25). இவர் அபுதாபியில் முசபா என்ற பகுதியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு இதயத்தமனியில் பிரச்னை இருந்ததாகத் தெரிகிறது. நாளடைவில் அந்தப் பிரச்னை தீவிரமடைந்த நிலையில், அவருக்கு இதயப்பகுதியில் வலி ஏற்பட்டுள்ளது. ஆனால் அது குறித்து அவர் அலட்சியமாக இருந்துள்ளார்.

image


Advertisement


நாளடைவில் வலி அதிகமானதால் அவர் இதய சம்பந்தமான பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளார். அப்போது அவருக்கு இதயத்தமனியில் தீவிரமான பிரச்னை இருந்தது தெரிய வந்தது. உடனடியாக அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரின் உடல் நிலை மோசமானதால், அங்கிருந்து அபுதாபியிலுள்ள புர்ஜீல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

image


அவர் அங்கு அபாயக்கட்டத்தை நெருங்கிய நிலையில், அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. மருத்துவர் வாலிட் ஷேக்கர் தலைமையிலான குழு இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டது. கடந்த 16 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்கிய அறுவை சிகிச்சை அடுத்த நாள் காலை 6 மணிக்கு நிறைவுற்றது. சிகிச்சையின் முடிவில் அவரது உடல்நிலை சீராக இருப்பது தெரிய வந்தது.


Advertisement

இது குறித்து மருத்துவர் வாலிட் ஷேக்கர் கூறும் போது “ இப்படிப்பட்ட நிலையில் இருக்கும் ஒருவர் உடனடியாக மருத்துவமனையை அணுகாவிட்டால் அவர் அடுத்த சில மணி நேரங்களில் உயிரிழந்து விடுவார். ஆனால் முஹம்மது அர்ஷத் காப்பற்றப்பட்டது அதிசயத்திலும் அதிசயம்தான். எனது அனுபவத்தில் இவ்வளவு தாமதமாக சிகிச்சை எடுத்துக்கொண்ட நபர் முதன் முறையாக காப்பாற்றப்பட்டுள்ளார். இந்த இதய பிரச்னைக்கு அவரது மரபணுவில் இருந்த பிரச்னையே காரணம்” என்று தெரிவித்தார்.

 

 

 

loading...

Advertisement

Advertisement

Advertisement